"புதிய கல்விக் கொள்கை திருத்தி எழுத வேண்டும்" - மத்திய அரசுக்கு பா.ம.க. வலியுறுத்தல்
பதிவு : ஜூலை 30, 2020, 04:21 PM
8-ம் வகுப்பு வரை பொதுத் தேர்வு, மும்மொழி கொள்கை தேவையற்றவை என்றும், புதிய கல்விக் கொள்கை திருத்தி எழுதப்பட வேண்டும் எனவும் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
8-ம் வகுப்பு வரை பொதுத் தேர்வு, மும்மொழி கொள்கை தேவையற்றவை என்றும், புதிய கல்விக் கொள்கை திருத்தி எழுதப்பட வேண்டும் எனவும் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான திட்டங்கள் மொழித் திணிப்பையும், ஏழை மற்றும் அடித்தட்டு மக்களிடம் இருந்த  பள்ளிக் கல்வியை பறிப்பதையும் தான் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன என சாடியுள்ளார். அந்த வகையில் இந்தக் கொள்கை ஆபத்தானது என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார். உயர் கல்விக்கான ஒழுங்கு முறைகள் பெரும்பாலும் தனியாருக்கு சாதகமானவையாக இருப்பதால், உயர் கல்வியை தனியாரிடம் ஒப்படைத்து விட்டு, அரசு  விலகிக் கொள்ளுமோ? என்ற ஐயம் ஏற்படுகிறது. இந்த ஐயத்தை மத்திய அரசு போக்க வேண்டும் என்றும் அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார். கோத்தாரி ஆணைய அறிக்கையில் உள்ள  ஆக்கப் பூர்வமான அம்சங்களை புதிய கொள்கையில் சேர்க்க வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

411 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

398 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

107 views

பிற செய்திகள்

முழுக் கொள்ளளவை நெருங்கும் பவானி அணை- வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் முழுக்கொள்ளவான 102 அடியில் 101 அடியை எட்டியதை தொடர்ந்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

5 views

சென்னையில் கஞ்சா மொத்த விற்பனை - பெண் உட்பட 4 கஞ்சா வியாபாரிகள் கைது

ஆந்திராவில் இருந்து கஞ்சா மூட்டைகளை கொண்டு வந்து சென்னை வண்ணாரப் பேட்டையில் மொத்த விற்பனை செய்த கஞ்சா வியாபாரிகள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

55 views

ஓட ஓட விரட்டி இளைஞர் குத்தி கொலை - கஞ்சா தர மறுத்ததால் நடந்த விபரீதம்

தாம்பரம் அருகே கஞ்சா தர மறுத்ததால் இளைஞர் ஓட ஓட விரட்டி குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

28 views

கொரோனா நோய் தொற்று உறுதியானதால் அதிர்ச்சி- மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 52 வயது பெண்மணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

172 views

காவலர்கள் பணியிட மாற்றம் - விருப்ப மனுக்களை உடனடியாக பெற உத்தரவு

சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரை பணியிட மாற்றம் தொடர்பான விருப்ப விவரங்களை பெற்று உடனடியாக காவல் ஆணையர் அலுவலகம் அனுப்ப காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

78 views

(11/08/2020) ஊர்ப்பக்கம்

(11/08/2020) ஊர்ப்பக்கம்

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.