சேலத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி
பதிவு : ஜூலை 30, 2020, 08:37 AM
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் உயிரிழந்தனர். தலைவாசல் பகுதியில் தற்கொலை செய்து கொண்ட 40 வயது நபருக்கு கொரோனா தொற்று இருந்த‌து கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 38ஆக அதிகரித்த‌து. இதில் 8 பேர் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி 

கேரளா மருத்துவக்கழிவுகளை, நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பகுதியில் கொட்டிய லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். லாரி ஓட்டுநரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கேரள மாநிலம் கோட்டையம் பகுதியில் இருந்து மருத்துவ கழிவுகளை ஏற்றிவந்த‌து தெரியவந்த‌து. இதனையடுத்து மருத்துவ கழிவுகளை ஏற்றிவந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள பொன்மலர்பாளையம் பிரிவு பகுதியில் கேரளா மாநிலம் கோட்டையம் பகுதியிலிருந்து வந்த லாரியில் டயர் பாரத்துடன் மருத்துவக்கழிவுகளை ஏற்றி வந்து பரமத்திவேலூர் - ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் கொட்டியுள்ளனர். அதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் லாரியை சிறைப்பிடித்து பரமத்திவேலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார் லாரி ஓட்டுநர், கிளீனர் இடம் விசாரித்தபோது கேரளா மாநிலம் ஆளபுலாவை சேர்ந்த டேவிட் என்பவருடைய லாரி என்பதும் லாரி ஓட்டுனர் லெனிஸ், கிளீனர் ஜூயஸ் என்றும் கோட்டயத்தில் இருந்து மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்ததாக தெரிவித்தனர்.மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் பொன்மலர்பாளையம் பிரிவு பகுதியில் பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான வெல்லம் தயாரிப்பு ஆலைக்கு டயர் பாரத்தை இறக்க வந்ததாகவும் மருத்துவக்கழிவுகளை அப்பகுதியில் கொட்டுவதற்கு முயலும் போது பொதுமக்களால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்து மருத்துவக்கழிவுகளை ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தனர்.கட்டுப்பாட்டு அறையில் துணைநிலை ஆளுநர் ஆய்வு

புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பேரிடர் மேலாண்மை துறை அலுவலகத்தில் செயல்படும் கொரோனா கட்டுப்பாடு அறையில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி திடீர் ஆய்வு மேற்கொண்டார். கட்டுப்பாட்டு மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து உயர் அதிகாரிகள், துணைநிலை ஆளுநரிடம் விளக்கினர்.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.  அதிகபட்சமாக இன்று 166 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில்,  கொரோனா பரவலை கண்காணிக்கவும்,  கட்டுப்படுத்தவும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரிடர் மேலாண்மை துறை அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.  இது 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.
இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கொரோனா கட்டுப்பாட்டு அறைக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  அங்கு  கொரோனா தொடர்பான தகவல்களை பெறவும்,  தொடர்ந்து அவற்றை அதிகாரிகளுக்கு பகிர்ந்து கொள்ளவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.  அங்கிருந்த சுகாதாரத்துறை செயலரும், மாவட்ட ஆட்சியரும் அருண்,  கொரோனா கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து துணைநிலை ஆளுநரிடம் விளக்கி கூறினார்.
60% முதியவர்களுக்கு எலும்பு சிதைவு பிரச்சினை''

இந்தியாவில் 68 வயதுக்கு மேல் உள்ள 60 சதவீதம் பேருக்கு  எலும்பு மற்றும் மூட்டு சிதைவு பிரச்சினை உள்ளதாக எலும்பியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சரியான உடல் எடையை பராமரித்தல் மற்றும் உடற்பயிற்சி மூலம், இப்பிரச்சினையை தவிர்க்கலாம் என தெரிவித்த அவர்கள், இதுகுறித்து விழிப்புணர்வு பிரசுரங்களையும் வெளியிட்டனர்.
என்று தமிழ்நாடு எலும்பியல் துறை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்....... 


நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 4-ஆம் தேதி தேசிய எலும்பு மற்றும் மூட்டு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆகஸ்டு 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி,  இந்த ஆண்டு எலும்பு மூட்டு சிதைவு நோயில் குறைபாடு ஏற்படுவதை தடுப்பது குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கி மருத்துவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். இதற்கான துண்டு பிரசுரங்களை மருத்துவர்கள் வெளியிட்டனர்

இதுகுறித்து தமிழ்நாடு எலும்பியல் துறை சங்கத்தின் மருத்துவர்கள் கூறும்போது, இந்தியாவில் 68 வயதுக்கு மேல் உள்ள 60 சதவீத பேருக்கு  எலும்பு மூட்டு சிதைவு பிரச்சனை உள்ளது. மேலும் இந்த நோயினால் ஆண்டுக்கு 2 முதல் 5 சதவீதம் வரை அதிகரிக்கின்றன.  
இந்த குறைபாடு பொதுவாக முழங்கால், கணுக்கால் மற்றும் முதுகெலும்பு போன்ற முக்கிய மூட்டுகளில் காணப்படுகிறது. இதை தடுக்க சராசரி எடையை பராமரிப்பது, வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது வைட்டமின் டி மற்றும் கால்சியம் போதுமான அளவுடன் சீரான உணவை உட்கொள்வது,  தசை வலிமையை மேம்படுத்துதல் போன்றவையாகும். கொரோனா வைரஸ் காரணமாக முகாம்கள் நடத்த முடியாததால்  எலும்பு மூட்டு சிதைவு நோயினால் ஏற்படும் குறைபாடுகளை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.கையுறைகள் தட்டுப்பாடு - மருத்துவர்கள் அவதி

அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் கையுறைகளை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி பயன்படுத்துவதால், இவ்வகை கையுறைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கையுறைகளின் விலை 100 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் காட்டனால் ஆன கையுறைகளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


துணை மின் நிலையத்தில் பழுது
5 மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு

நாகை மாவட்டம் கோட்டைவாசல்பட்டியில், துணைமின் நிலையத்தில் ஏற்பட்ட பழுதால், சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. துணை மின் நிலையத்தில் உள்ள 11 கிலோ வோல்ட் அளவிளான பிரேக்கர், உயர் மின் அழுத்தம் காரணமாக வெடித்து சிதறியதால் மின்சாரம் தடைபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் பவித்ரோற்சவம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பவித்ரோற்சவம் நடைபெற்றது. ஏகாம்பரநாதர் மற்றும் ஏலவார் குழலி அம்மனுக்கு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு ஆராதனைகள் நடந்தது.
கோவில் உற்சவ மண்டபத்தில் நடைபெற்ற பவித்ரோற்சவத்தில் சிவாச்சாரியர்கள் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பக்தர்கள் யாரும் அனுமதிக்கபடவில்லை.

தொடர்புடைய செய்திகள்

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.

681 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

429 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

415 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

111 views

வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று

வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

32 views

பிற செய்திகள்

தந்தி டிவி செய்தி எதிரொலி - தினமும் 900 மூட்டை நெல் கொள்முதல்

கும்பகோணம் அருகேயுள்ள திருப்புறம்பியம் நெல் கொள்முதல் நிலையத்தில் தினமும் 300 மூட்டைகள் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

12 views

கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பங்கேற்ற திமுக எம்.எல்.ஏ - சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விட்டோபா கோவிலில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் திமுக எம்.எல்.ஏ பெரியண்ணன கலந்து கொண்டார்.

11 views

கொரோனா நோயாளிகளிடம் வீடியோ கால் மூலம் பேசிய அமைச்சர் - மருத்துவ பணியாளர்களை பாராட்டிய விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையிலிருந்து காணொலி அழைப்பு மூலம் பேசினார்

18 views

தமிழகத்தில் 2.50 லட்சம் பேர் குணமடைந்தனர் - புதிதாக 5,834 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 2.50 லட்சமாக உயர்ந்து இருக்கிறது

15 views

தமிழகத்துக்கு ரூ.335.41 கோடி மானியம்

தமிழகத்துக்கு 335 கோடியே 41 லட்ச ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

9 views

தந்தி டிவி செய்தி எதிரொலி - காணாமல் போன ஓடையை தேடி வரும் அதிகாரிகள்

அரியலூர் மாவட்டம் உல்லியக்குடி பகுதியில் இருந்த ஊர்கா ஓடையை காணவில்லை விவசாயிகள் புகார் அளித்திருந்த நிலையில் ஓடையை தூர்வாரக்கோரி நீதிமன்றம் உத்ரவிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.

91 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.