8 வழிச்சாலை - நிலம் கையக விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம்
பதிவு : ஜூலை 30, 2020, 08:07 AM
சேலம் 8 வழிச் சாலைக்கு நிலம் கையகத்துக்கு சுற்றுச் சூழல் முன்அனுமதி தேவையில்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
சேலம் 8 வழிச் சாலைக்கு நிலம் கையகத்துக்கு சுற்றுச் சூழல் முன்அனுமதி தேவையில்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. விவசாயிகளின் எதிர்ப்பை தொடர்ந்து, சென்னை-சேலம் 8 வழிச் சாலை திட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. Card 1 இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில், மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை இணை இயக்குனர் ஆஷிஷ் குமார் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், Card 2 2006-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கைபடி, நிலம் கையகப்படுத்த முன்அனுமதி தேவையில்லை என கூறியுள்ளது. நிலத்தின் மீது கட்டுமானம் உள்ளிட்ட பணிகளை தொடங்கும் முன்தான், சுற்றுச் சூழல் அனுமதிபெற வேண்டும் என்றும், சுற்றுச்சூழல் பாதிப்பு, மாற்றம் உள்ளிட்ட அனைத்தையும் கருத்தில் கொண்டு வல்லுனர் குழு ஆலோசனைகளின் பேரில், திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது. நிலம் கையகப்படுத்துவதன் நிலை குறித்த நம்பத்தகுந்த ஆவணங்களே போதுமானவை என பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. இதுதொடர்பான வழக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

279 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

183 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

149 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

47 views

பிற செய்திகள்

சிறுத்தையை கொன்று தின்ற கும்பல்

கேரளாவில் சிறுத்தையை பொறி வைத்து பிடித்து அதை கறி சமைத்து சாப்பிட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

2 views

தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு

இலங்கை கடற்படை கப்பல் மோதி கடலில் படகு மூழ்கி உயிரிழந்த தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

8 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

47 views

இளவரசிக்கு கொரோனா உறுதி

சசிகலாவை தொடர்ந்து, அவருடன் சிறையிலிருந்த இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

80 views

தமிழக மீனவர்கள் மீது கேரள மீனவர்கள் கொடூர தாக்குதல் - கொடூரமாக தாக்கப்படும் காட்சிகள்

கேரள மாநிலம் கொச்சியில் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

282 views

ஒசூர் கொள்ளை கும்பலை, ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீசார்

ஒசூரில் நேற்று காலை தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை ஹைதராபாத் அருகே தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

80 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.