மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை அறிவிப்பு - "எந்த மாணவர் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படமாட்டாது"
பதிவு : ஜூலை 29, 2020, 11:05 PM
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைப்படி அனைத்து மாநிலங்களிலும் மொழிப்பாடங்கள் கற்பிக்க மும்மொழி திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் மொழிப்பாடங்கள் கற்பிக்க இருமொழி திட்டம் நடைமுறையில் உள்ளது. மாணவ- மாணவிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிப் பாடங்களாக போதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா, சி.பி.எஸ்.இ. கல்வி நிறுவனங்களில் ஆங்கிலம் , இந்தி மற்றும் சமஸ்கிருதம் மொழி பாடங்களாக போதிக்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் எந்த மாணவர் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு வரையிலும் , ஆனால் 8-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் முன்னுரிமை அடிப்படையிலும் , தாய்மொழி, உள்ளூர் மொழி பிராந்திய மொழி  பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என புதிய கல்வி கொள்கை வலியுறுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

மும்மொழி திட்டம் உள்பட  அனைத்து நிலை ,  பள்ளி மற்றும் உயர்கல்வியில் சமஸ்கிருதம் மாணவர்களின் விருப்பமாக இருக்கும் வகையில் வழங்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இதர செம்மொழிகள் மற்றும் இலக்கியங்களும் விருப்பப் பாடங்களாக இருக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 

'ஒரே பாரதம் உன்னத பாரதம்'  என்ற முன்முயற்சியின் கீழ், 6 முதல் 8  வரையான வகுப்புகளில் ' இந்திய மொழிகள்  குறித்த செயல் திட்ட நடவடிக்கைகளில்  மாணவர்கள் பங்கேற்கலாம் என்றும்,  இடைநிலை கல்வி நிலையில், பல்வேறு வெளிநாட்டு மொழிகளும் கற்பிக்கப்படும் என்றும் புதிய கல்வி கொள்களையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

271 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

253 views

பிற செய்திகள்

காமராஜர் பல்கலை. தொலைதூரக் கல்வி தேர்வில் முறைகேடு

விடைத்தாள் திருத்தும் போது தலா 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்குமாறு, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு துணை வேந்தர் பரிந்துரைத்துள்ளார்.

12 views

தஞ்சை அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா நிதியுதவி

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு, நடிகை ஜோதிகா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

177 views

ஊரடங்கால் ஏற்பட்ட வறுமையால் பறிபோன உயிர் - பூக்கடை வியாபாரி மன உளைச்சலால் தற்கொலை

ஊரடங்கால் போதிய வருமானமின்றி தவித்து வந்த பூக்கடை வியாபாரி ஒருவர் திருச்செந்தூரில் தற்கொலை செய்து கொண்டார்.

622 views

"தேசிய கல்விக் கொள்கையில் மாற்றங்கள் வேண்டும்" - பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தேசிய கல்விக் கொள்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதமர் மோடிக்கு, திமுக தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.

116 views

"தலைமையின் கடிதம் கிடைத்தது, குற்றச்சாட்டு தெளிவாக இல்லை" - "எனக்கு அனுப்பிய கடிதத்தை திரும்ப பெற வேண்டும்" - கு.க. செல்வம்

கட்சியின் மாண்பை மீறியதாக கூறுவது இயற்கை நீதிக்கு விரோதமானது எனக் கூறும் தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க. செல்வம் நோட்டீஸை திரும்பப்பெறுமாறு கோரியுள்ளார்.

30 views

சுதந்திர தின விழா ஒத்திகை - சமூக விலகலுடன் போலீசார் அணிவகுப்பு

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னை காமராஜர்சாலையில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.