ராஜீவ் கொலை வழக்கு - 7 பேர் விடுதலை விவகாரம் : ஜெயின் கமிஷன் அறிக்கைக்காக காத்திருப்பதாக ஆளுநர் தரப்பு விளக்கம்
பதிவு : ஜூலை 29, 2020, 06:41 PM
7 பேர் விடுதலை விவகாரத்தில், ஜெயின் கமிஷன் அறிக்கைக்காக காத்திருப்பதாக, ஆளுநர் தரப்பு விளக்கம் அளித்துள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் பரோல் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த வாரம்  நடைபெற்ற போது, ஆளுநர் முடிவு எடுக்காமல் இருப்பதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.பரோல் தொடர்பாக என்ன முடிவு எடுத்துள்ளீர்கள் என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பரோல் குறித்து மனு அளித்து கிட்டத்தட்ட 4 மாதங்களாகிவிட்டது, ஏன் இன்னும் முடிவெடுக்கவில்லை என  நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சம்பந்தப்பட்ட சிறைத்துறை அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கட்டும்மா? என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். அப்போது குறுக்கிட்ட தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், ராஜிவ் கொலை வழக்கில் சர்வதேச தொடர்புகள் குறித்து விசாரிக்க ஜெயின் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் பன்னோக்கு விசாரணை முகமை விசாரணை நடத்தி வருவதாகவும், ஏழு பேர் விடுதலை குறித்து முடிவெடுக்க அதன் அறிக்கைக்காக காத்திருப்பதாக ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார். பேரறிவாளனுக்கு பரோல் கோரிய மனுவுக்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அரசுத்தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, விசாரணையை நீதிபதிகள் திங்கள் கிழமைக்கு தள்ளிவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை - பல இடங்களில் சாலைகளில் தேங்கிய மழைநீர்

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தாம்பரம், ஆலந்தூர், வேளச்சேரி, தரமணி, குரோம்பேட்டை பகுதிகளில் மழை பெய்தது.

68 views

பிற செய்திகள்

கட்டாயப்படுத்தி 100 % கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தனியார் பள்ளிகள் பெற்றோரை கட்டாயப்படுத்தி 100 சதவீத கட்டணங்களை வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

86 views

ஐ.ஐ.டி களில் சமூக நீதிக்காக இன்னும் எவ்வளவு காலம் காத்திருப்பது? - மத்திய கல்வி அமைச்சரிடம் மறுமொழி கேட்டு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்.

ஐ.ஐ.டி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில், இடஒதுக்கீடு அமலாக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, தனது அறிக்கையை தயாரித்து சமர்ப்பித்து விட்டதா என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

80 views

"கொரோனா முகாமில் அடிப்படை வசதி இல்லை" - அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கொரோனா நோயாளி

திருவண்ணாமலை மாவட்டம் தச்சூர் அரசு பொறியியல் கல்லூரியில் கொரோனா நோயாளிகள் சுமார் 152 பேர் தங்க வைக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

235 views

சென்னையில் மாயமான 118 சவரன் நகை : பெங்களூருவில் நகையுடன் சிக்கிய கடை ஊழியர்

சென்னையில் உள்ள பிரபல நகைக்கடையில் திருடப்பட்ட 118 சவரன் தங்க நகைகள் பெங்களூர் விமான நிலையத்தில் சிக்கியுள்ளன.

380 views

தள்ளுவண்டியில் எடுத்து சென்று தகனம் செய்த விவகாரம் - 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

தேனியில், கொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடலை, தள்ளுவண்டியில் எடுத்து சென்று தகனம் செய்த விவகாரம் தொடர்பாக, 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தேனி மாவட்ட ஆட்சியருக்கும், நகராட்சி நிர்வாக ஆணையருக்கும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

26 views

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து - சம்பவ இடத்தில் 3 பேர் பலி

திருப்பூர் பெள்ளிகாளிபாளையம் பகுதியில் சாலையில் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதியது. இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர்.

1458 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.