"ரஃபேல் விமானங்களைப் பெற்ற இந்திய விமானப்படைக்கு வாழ்த்து" - டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள காங்கிரஸ்
பதிவு : ஜூலை 29, 2020, 06:08 PM
ரஃபேல் ஜெட் விமானங்களைப் பெற்ற இந்திய விமானப்படைக்கு, காங்கிரஸ் கட்சி, தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளது.
ரஃபேல் ஜெட் விமானங்களைப் பெற்ற இந்திய விமானப்படைக்கு, காங்கிரஸ் கட்சி, தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளது. 2012 இல் ரஃபேலை அடையாளம் கண்டு வாங்குவதில், காங்கிரஸ் அரசாங்கத்தின் உழைப்பு இறுதியாக பலனைத் தந்தது என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ரஃபேல் ஒப்பந்தத்தில், காங்கிரஸ் மற்றும் பாஜக  இடையில் வேறுபாடு அதிகம் இருப்பதாகவும், பாஜக அதில் பல மோசடி செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ரஃபேல் கொள்முதல் பாஜகவின் 36 க்கு பதிலாக, 126 ஜெட் விமானங்களைப் பெறுவதை காங்கிரஸ் உறுதி செய்திருக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 108 ரஃபேல் ஜெட் விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருக்கும் என்றும், காங்கிரஸ் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

408 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

390 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

106 views

பிற செய்திகள்

புதுச்சேரி கல்வி அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கமலக்கண்ணன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

19 views

கொரோனாவில் இருந்து மீண்ட கர்நாடகா முதல்வர் எடியூரப்பா - விரைவில் பணிக்கு திரும்புவேன் என டிவிட்டர் பதிவு

கர்நாடகா முதல்வர் எடியூரப்பா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார். கடந்த 2ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட எடியூரப்பா , பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

17 views

"பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை நிறுவி 11 ஆண்டுகள் நிறைவு" - வள்ளுவர் சிலைக்கு கர்நாடக துணை முதல்வர் அசோக் நாராயண் மரியாதை

பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை நிறுவி 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி, கர்நாடக துணை முதல்வர் அசோக் நாராயண், வள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

34 views

பயணிகள் ரயில் சேவை எப்போது? - ஆக.13 முதல் ரயில் சேவை தொடங்குமா?

ரயில் சேவை ஆகஸ்ட் 12 வரை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 13 முதல் ரயில் சேவை துவங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

925 views

6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை - பருவமழை, வெள்ள அபாயம் குறித்து விவாதம்

தென்மேற்கு பருவமழை மற்றும் தற்போதைய வெள்ள சூழ்நிலை குறித்து அசாம், பீகார், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரள மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

28 views

ராகுல்காந்தி உடன் சச்சின் பைலட் சந்திப்பு - காங்கிரஸ் கட்சிக்காக தொடர்ந்து பணியாற்ற உறுதி

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள, சச்சின் பைலட் ராகுல்காந்தியை சந்தித்து விளக்கமளித்தார்.

142 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.