இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் தேர்வு - நவீன மென்பொருள் வடிவமைப்புக்கு அண்ணா பல்கலை டெண்டர்
பதிவு : ஜூலை 29, 2020, 05:56 PM
நவீன மென்பொருள் உதவியுடன் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த அண்ணா பல்கலைகழகம், முடிவு செய்துள்ளது.
கடந்த 23 ஆம் தேதி கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். எனினும் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை.
இந்த நிலையில் பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வினை ஆன்-லைன் வழியில் நடத்த, அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதன்படி,  மாணவர்கள் அமர்ந்துள்ள அறையில், மாணவரை தவிர்த்து வேறு நபர்கள் உள்ளனரா என்பன உள்ளிட்டவற்றை மொத்தமாக  கண்காணிக்கும் வகையிலான மென்பொருள் உதவியுடன் தேர்வு நடத்தப்பட உள்ளது.  
ஆன்-லைன் தேர்வு சமயத்தில்  முறைகேடுகளில் ஈடுபடுவதை கண்டுபிடித்து தடுக்கும் வகையிலும் நவீன மென்பொருள் தயாரிக்க, பல்கலை நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது.
1.86 கோடி ரூபாய்க்கு அறிவிக்கப்பட்டுள்ள டெண்டருக்கு,  தகுதியான நிறுவனங்கள் வரும் 29 ஆம் தேதி முதல்,  ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் இறுதி செமஸ்டர் தேர்வு நடப்பது உறுதியாகி இருக்கிறது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.