சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் : "அரசு அதிகாரத்தை பறிகொடுக்கக் கூடாது" - ஸ்டாலின்
பதிவு : ஜூலை 29, 2020, 05:25 PM
சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில், மாநில அரசு அதிகாரத்தை பறிகொடுத்துவிடக் கூடாது என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வு குழு தலைவராக டெல்லி ஜே.என்.யூ துணைவேந்தரை நியமித்தது முதல் கோணலாகும் என விமர்சித்துள்ளார். 
விண்ணப்பித்த 177 பேரில் 12 நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டது எதனடிப்படையில்? அவர்களில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர்? என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். பாரம்பரிய மிக்க தனிச்சிறப்பு வாய்ந்த சென்னை பல்கலைக் கழகத்திற்கு,  தமிழகத்தின் தலைசிறந்த கல்வியாளர் ஒருவரையே துணைவேந்தராக நியமிக்க வேண்டும் எனவும், இந்த விவகாரத்தில் மாநில அரசு தனது அதிகாரத்தை பறிகொடுத்துவிடக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். 


ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.