"சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020" - நடிகர் கார்த்தி கருத்து
பதிவு : ஜூலை 28, 2020, 04:35 PM
மத்திய அரசு வெளியிட்டிருக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020 வரைவு, நாட்டின் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த வரைவு அறிக்கையில் பல முக்கிய திட்டங்களை, மக்கள் கருத்து கேட்பு மற்றும் பொது ஆலோசனைகள் இல்லாமலேயே நிறைவேற்றலாம், என்று இருக்கும் ஒரு சரத்தே, பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். 

நம் சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களையும், அதனால் நமக்கு ஏற்படும் பாதிப்புகளை பற்றியும், மக்களாகிய நாம் பேசவே முடியாது என்பது எந்த வகையில் நியாயமான சட்டமாக இருக்கும் என்று நடிகர் கார்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்

குமரி முதல் காஷ்மீர் வரையிலுமான சட்டம் என்ற போதிலும், இந்த வரைவறிக்கை வெறும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் வெளியிட்டது ஏன் என்றும்,

கொரோனா தொற்றில் இருந்து மீள போராடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், இந்த சட்டத்தை எதற்கு இவ்வளவு அவசரமாக நிறைவேற்ற வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வரைவு அறிக்கையின் சாதக பாதக அம்சங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து விவாதமாக்கி, கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என கார்த்தி கேட்டுக்கொண்டுள்ளார். அறிஞர்கள், ஆய்வாளர்கள், கருத்துக்களுக்கும், மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, தேவையான மாற்றங்களை புதிய வரைவில், கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2977 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

1665 views

"சாமானிய மக்களுக்காக பாடுபட்டவர் ஜெயலலிதா" - அமைச்சர் சரோஜா தகவல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முதியவர்களுக்கான உதவித் தொகை மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

325 views

பிற செய்திகள்

துக்ளக் தர்பார் - "அண்ணாத்த செய்தி" பாடல் வெளியீடு

விஜய் சேதுபதி , நடிக்கும் துக்ளக் தர்பார் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது. கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

281 views

இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்

இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயமாகி உள்ளது.

59 views

"ரகிட ரகிட" பாடலுக்கு ஆட்டம் போடும் சுட்டிக் குழந்தை

தனுஷின் ரகிட ரகிட பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் குழந்தை ஒன்று அந்த பாடலுக்கு நடனமாடும் வீடியோவை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பதிவிட்டுள்ளார்.

358 views

சிம்பு பாடி தயாரித்துள்ள இசை ஆல்பம் - பாடலின் மோஷன் போஸ்டர் வெளியீடு

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு நடிகர் சிலம்பரசனின் "ஞேயங் காத்தல் செய்" என்ற இசை ஆல்பத்தில் உள்ள "என் நண்பனே" என்ற பாடலின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

282 views

"இசைக்கருவிகள், இசை குறிப்புகள் திருட்டு" - பிரசாத் ஸ்டுடியோ மீது இளையராஜா புகார்

பிரசாத் ஸ்டுடியோ மீது இளையராஜா அளித்த புகார் குறித்து இன்று நேரில் விசாரிக்க சென்னை போலீஸ் திட்டமிட்டுள்ளது.

112 views

பிரசாத் ஸ்டூடியோ - இளையராஜா விவகாரம்: "இளையராஜாவை வெளியேற்றியதில் ச‌தி"- இசையமைப்பாளர் தீனா கருத்து

சென்னையில் உள்ள பிரபல பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து இசைஞானி இளையராஜாவை வெளியேற்றியது சதியாக இருக்கலாம் என இசையமைப்பாளர் தீனா தெரிவித்துள்ளார்.

429 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.