தடுப்புகளை தாண்டி வரச்சொன்ன அதிகாரி - வீட்டுத் தனிமையில் இருந்த பெண் அதிர்ச்சி
பதிவு : ஜூலை 28, 2020, 04:10 PM
வீட்டுத் தனிமையில் இருந்த பெண்களை, தடுப்புகளை தாண்டி கொரோனா பரிசோதனைக்கு வருமாறு அதிகாரி அழைப்பு விடுத்த சம்பவம், கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் கிருஷ்ணராயபுரத்தில் இளைஞர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வசித்து வந்த வீடு, தனிமைப்படுத்தப்பட்டு, தகரங்கள் கொண்டு முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வீட்டில் இருக்கும் நான்கு பெண்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள துணை சுகாதார நிலையத்திற்கு 4 பேரும் தனித்தனியே நடந்து வர வேண்டும் எனக் கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள், வீடு முற்றிலும் அடைக்கப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு வெளியே வர முடியும் என கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு அவர், தடுப்புகளை தாண்டி வருமாறு அலட்சியமாக பதில் அளித்துள்ளார். குழந்தைக்கு பால் வாங்குவதற்கு கூட வெளியே வர முடியாத நிலையில், அதிகாரியின் இந்த பேச்சு, மனஉளைச்சலை தருவதாக வேதனையுடன் அந்த பெண் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், அதிகாரிகளின் இதுபோன்ற அலட்சிய போக்கே காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அமைச்சர் - உற்சாக வரவேற்பு அளித்த அதிமுகவினர்

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார்.

392 views

திருமங்கலம் : முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் எம்எல்ஏக்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

160 views

பிற செய்திகள்

"சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் மத்திய அரசு கைவிட வேண்டும்" - பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்த​ல்

சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

52 views

"இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

இ-பாஸ் முறையில் தளர்வுகள் என்றும், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்கவே தான் வலியுறுத்தி வந்த தாக தெரிவித்துள்ளார்.

42 views

விநாயகர் சிலை வைக்க தமிழக அரசு தடை - தடையை மீறி இந்து முன்னணி சார்பில் சிலை பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக விநாயகர் சிலை வைக்க தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில், இந்து முன்னணி சார்பில் நெல்லை டவுணில், முதல் வினாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

78 views

சென்னை பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய இளங்கலை மற்றும் முதுகலை படிப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

70 views

"தமிழக அரசின் நிதி நிலைமை மோசமாகி விட்டது" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

தமிழக அரசின் நிதிநிலைமை வீழ்ச்சியடைந்து, மிகவும் மோசமாகி விட்டதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

41 views

தமிழகத்தில் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.