நடிகர்கள் சூரி, விமல் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு - ஊரடங்கு உத்தரவை மீறியதால் நடவடிக்கை
பதிவு : ஜூலை 28, 2020, 02:24 PM
ஊரடங்கு விதிகளை மீறி கொடைக்கானல் வனப்பகுதிக்குள் சென்ற நடிகர்கள் சூரி மற்றும் விமல் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள பேரிஜம் ஏரியில் நடிகர்கள் சூரி மற்றும் விமல் உள்ளிட்டோர் மீன்பிடித்த படங்கள் வெளியானது. இதையடுத்து அவர்கள் மீது வனத்துறை வழக்குப்பதிவு செய்து அபராதமும் விதித்தது. இந்த நிலையில் 
கோட்டாட்சியர் சிவகுமார் நடத்திய விசாரணையில் அவர்கள் இ-பாஸ் இல்லாமல் வந்ததும் ஏரியில் மீன்பிடித்ததும் தெரியவந்தது. இதையடுத்து நடிகர்கள் விமல், சூரி உள்ளிட்டோர் மீது தொற்றுநோய் பரவும் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தங்கிய இடங்கள் உள்ளிட்டவை குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பான வனத்துறையை சேர்ந்த பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் தற்போது விசாரணையும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதால் மேலும் பலர் சிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

343 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

305 views

மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்

பெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

111 views

பிற செய்திகள்

காதலியை கரம்பிடித்தார் நடிகர் ராணா - எளிமையாக நடந்த திருமண நிகழ்ச்சி

பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து அசத்திய ராணா தனது காதலி மிஹீகாவை கரம் பிடித்தார்.

198 views

நடிகர் சுஷாந்த் சிங் எழுதிய நன்றிகடன் பட்டவர்கள் பட்டியல் - சமூகவலைதளத்தில் வெளியிட்ட நடிகை ரியா

நடிகர் சுஷாந்த் சிங் எழுதியதாக கூறப்படும் நன்றிகடன் பட்டவர்கள் பட்டியலை நடிகை ரியா சக்கரபோர்த்தி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

901 views

நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்ட பாடல் - திரையுலகினர் பாராட்டு

நடிகை ஸ்ருதிஹாசன் EDGE என்கிற பாடலை பாடி வெளியிட்டுள்ளார்.

226 views

மூச்சுத் திணறலை அடுத்து சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி - தற்போது நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தகவல்

மூச்சு திணறல் காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்தி நடிகர் சஞ்சய் தத் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

37 views

கொரோனா சிகிச்சையில் இருக்கும் எஸ்.பி.பி - தொலைபேசியில் நலம் விசாரித்த ரஜினிகாந்த்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திடம் தொலைபேசி வாயிலாக நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்துள்ளார்.

176 views

சொன்னதை செயலாக மாற்றிக் காட்டிய நடிகை ஜோதிகாவின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்

தான் சொன்னதை நிரூபிக்கும் விதமாக தஞ்சையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா உதவிகள் செய்திருப்பதற்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது

937 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.