தென்னிந்தியாவை புறக்கணிக்கிறதா பாலிவுட்? - ஏ.ஆர். ரகுமானை தொடர்ந்து, ரசூல்பூகுட்டி குற்றச்சாட்டு
பதிவு : ஜூலை 28, 2020, 02:20 PM
இந்திய சினிமாவின் முகவரியாக கருதப்படும் பாலிவுட் திரையுலகம் மீது நடிகை கங்கனா ரணாவத், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை தொடர்ந்து ரசூல் பூக்குட்டி கூறியுள்ள குற்றச்சாட்டு மேலும் ஒரு புயலை கிளப்பியுள்ளது.
பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14- ஆம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

வாரிசு நடிகர், நடிகைகளின் ஆதிக்கத்தால் மன அழுத்தத்தில் இருந்த நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. 

இது குறித்து கருத்து கூறி நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட்டில்  திறமையான நடிகர்களை மட்டம் தட்டி வாரிசு நடிகர், நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக பரபரப்பு குற்றஞ்சாட்டினார். இதனால் மற்றவர்களுக்கான வாய்ப்பு பறிபோவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

பாலிவுட்டில் வாரிசு அரசியல் என்ற பிரச்சனைகளை முன் வைத்து சமூக வலைத்தளங்களில் காரசாரமான வாக்குவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே பாலிவுட்டில் தன்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்வதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

இதற்கு ஆதரவாக பாலிவுட் பிரபல இயக்குனர் சேகர் கபூர் தமது டிவிட்டர் பதிவில் ஆஸ்கர் விருது வென்றது தான் இதற்கு காரணம் என கூறினார். 

இந்நிலையில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் சிறந்த ஒலிக் கலவைக்காக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி தன்னையும் பாலிவுட் திரையுலகினர் ஒதுக்கியதாக பரபரப்பு புகார் கூறியுள்ளார். 

இது குறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ரசூல் பூக்குட்டி, சேகர் கபூரை டேக் செய்து ஆஸ்கர் விருது வென்ற பிறகு இந்தி பட உலகம் தம்மை விலக்கி வைத்ததாக கூறினார். 

யாரும் தமக்கு வாய்ப்பு தரவில்லை என்றும் சில தயாரிப்பு நிறுவனங்கள் நீங்கள் எங்களுக்கு தேவையில்லை என கூறியதாக புகார் கூறியுள்ளார். 

ஹாலிவுட் செல்ல பல வாய்ப்புகள் வந்தும் இந்தியாவை விட்டு செல்ல மனமில்லாததால் போகவில்லை என ரசூல் பூக்குட்டி கருத்து பதிவிட்டுள்ளார். 

இது தவிர பாலிவுட்டில் புதிதாக அறிமுகமாகும் நடிகர்களின் வளர்ச்சியை நடிகர் சல்மான் கான் தடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அடுத்தடுத்து தொடுக்கப்படும் சரமாரி குற்றச்சாட்டுக்களால் பாலிவுட் திரையுலகம் திக்கு முக்காடி போயுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சுஷாந்த் சிங் எழுதிய நன்றிகடன் பட்டவர்கள் பட்டியல் - சமூகவலைதளத்தில் வெளியிட்ட நடிகை ரியா

நடிகர் சுஷாந்த் சிங் எழுதியதாக கூறப்படும் நன்றிகடன் பட்டவர்கள் பட்டியலை நடிகை ரியா சக்கரபோர்த்தி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

5144 views

நடிகர் சுஷாந்த் சிங் உயிரிழப்பு விவகாரம் - வழக்கை சிபிஐ விசாரிக்க ரசிகர்கள் வலியுறுத்தல்

நடிகர் சுஷாந்த் சிங் உயிரிழப்புக்கு பல காரணங்கள் சொல்லப்படும் நிலையில், அவர் மன அழுத்த பிரச்சினைக்கு சிகிச்சை எடுத்து வந்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

73 views

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு விவகாரம் - சுஷாந்த் காதலி உள்பட பலரிடம் அமலாக்கத்துறை விசாரணை

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக அவரது தந்தை கிருஷ்ணா கிஷோர் சிங் பீகார் மாநிலம் ராஜிவ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

32 views

பிற செய்திகள்

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

779 views

இன்று பாடலாசிரியர் நா.முத்துக்குமார் நினைவு நாள்

மறைந்த திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான நா.முத்துக்குமாரின் நினைவு நாள் இன்று.

62 views

சினிமா படப்பிடிப்புகள் நடத்த அனுமதிக்க வேண்டும் - முதலமைச்சருக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்

சினிமா படப்பிடிப்புகள் நடத்த சுதந்திர தின அறிக்கையில் முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

10 views

கமல்ஹாசன் பிறப்பு சிவப்பு; இருப்பு கறுப்பு - கவிஞர் வைரமுத்து

பிறப்பு சிவப்பாக இருந்தாலும், இருப்பு கறுப்பு என நடிகர் கமல்ஹாசன் குறித்து கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

21 views

77 லட்சம் டிஸ்லைக்குகள் பெற்றும் டிரெண்டிங்கில் "சடக்-2" முதலிடம்

சுஷாந்த் சிங் மரணத்துக்குப் பிறகு வாரிசு அரசியல் சர்ச்சை பாலிவுட்டில் பெரிதாக வெடித்துள்ளது.

42 views

ஜெயில் படத்தின் 2வது பாடல் ஆக.18ல் வெளியீடு

ஜெயில் படத்தின் இரண்டாவது பாடலாக பத்து காசு என்னும் பாடல் உருவாகியுள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.