ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் கண்டுபிடித்த தடுப்பூசி -மனிதர்களிடம் சோதனை நடத்த 5 இடங்கள் தயார்
பதிவு : ஜூலை 28, 2020, 10:27 AM
ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் கண்டுபிடித்து உள்ள கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி, மனிதர்களிடம் நடத்தப்பட உள்ள கடைசி கட்ட சோதனைக்கு 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் ஒன்றரை​ கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், ஆறு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தடுப்பூசி மற்றும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளன.இதில் சில நிறுவனங்கள் மனிதர்களிடம் பரிசோதனை நடத்தும் நிலைக்கு வந்துள்ளன. இந்த வகையில், ஆக்ஸ்போர்டு பல்லைக் கழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி, முதற்கட்ட சோதனையில் நல்ல பலனை அளித்துள்ளதாக 20 விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை சிறப்பாக, கொரோனா தொற்றுக்கு எதிராக செயலாற்ற உதவுவது தெரிய வந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இரண்டாவது முறை தடுப்பூசி செலுத்திய பின்னர் அதன் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த தடுப்பூசியை இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட சோதனையை மனிதர்களிடம்  மேற்கொள்ள 5 இடங்கள் தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது முக்கியமான முடிவு எனவும், இந்த தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் முன்பு அது தொடர்பான தகவல்கள் அரசிடம் இருக்க வேண்டியது அவசியம் என மத்திய பயோ உயிரியல் துறை செயலாளர் ரேணு சொரூப் தெரிவித்துள்ளார்.  இந்த தடுப்பூசியை தயாரிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும், அதன் கூட்டாளியான அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனமும், இந்தியாவின் சீரம் நிறுவனத்தை தடுப்பூசி உற்பத்திக்கு தேர்வு செய்துள்ளன.
முதல் கட்ட சோதனையில் குறைவான அளவிலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும், இரண்டாவது கட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு கட்டங்களாக சோதனை நூற்றுக்கணக்கான மக்களுக்கு நடத்தப்பட உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த 2 கட்ட சோதனையிலும் மனிதர்களின் பாதுகாப்பு மற்றும் மனிதர்களின் நோய் எதிர்ப்புத் திறன் குறித்து முக்கியமாக கவனம் செலுத்தப்படுகிறது என்றும்,  அதனைத் தொடர்ந்து மூன்றாவது  மற்றும் இறுதிக்கட்டமாக ஆயிரக்கணக்கான மக்களுக்கு இந்த தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை தூண்டிவிடுவதில் இந்த தடுப்பூசி வெற்றி பெறும் நிலையில், கொரோனா தொற்றை பல ஆண்டுகளுக்கு எதிர்க்கும் திறன் நமது நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தில் தானாக உருவாகி விடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2979 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

1665 views

"சாமானிய மக்களுக்காக பாடுபட்டவர் ஜெயலலிதா" - அமைச்சர் சரோஜா தகவல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முதியவர்களுக்கான உதவித் தொகை மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

325 views

வேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு

டெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

254 views

பிற செய்திகள்

கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி - விரைவில் 2 -ஆம் கட்ட பரிசோதனை

கோவாக்ஸின் தடுப்பூசியின், இரண்டாம் கட்ட பரிசோதனை வரும் வாரங்களில் தொடங்கப்பட உள்ளது.

5 views

புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்குவோம் - மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

புதுச்சேரியில் ஆட்சி அமைத்திடும் சூழலை உருவாக்குவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

266 views

அனுமான் கடி கோயிலில் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் சாமி தரிசனம்

அயோத்தியில் உள்ள அனுமான் கடி கோயிலில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சாமி தரிசனம் செய்தார்.

11 views

"ஆன்லைன் பணப் பரிவர்த்தனையில் ரூ.2.90 லட்சம் கோடி" - தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

ஆன்லைன் பரிவர்த்தனைகளில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஜூலை மாதத்தில் 2 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

197 views

மோடி தலைமையில் ராம் ராஜ்யம் அமையும் என்ற நம்பிக்கை வந்துள்ளது - ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

பிரதமர் மோடி ஆட்சியின் கீழ், இந்தியாவில் ராம ராஜ்யம் அமையும் என்ற நம்பிக்கை தமக்கு வந்துள்ளதாக ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

6 views

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,972 பேருக்கு கொரோனா தொற்று.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52 ஆயிரத்து 972 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.