ஆன் லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்கு - திங்கள் கிழமைக்கு தள்ளிவைப்பு
பதிவு : ஜூலை 27, 2020, 07:30 PM
ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் வகுப்புக்களில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும் போது ஆபாச இணைய தளங்கள் வருவதாகவும் எனவே ஆன்லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்கக் கோரி,சரண்யா என்பவர் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ் நீதிபதி ஹேமலதா ஆகியோர் அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் பரிந்துரைகளின்படி, தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது வரும் திங்கட்கிழமை வரை கால அவகாசம் வேண்டும் என்றும், அதற்குள் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு விதிமுறைகள் வகுத்து வெளியிடப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்று வழிகாட்டு நெறிமுறைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளனர்.

பிற செய்திகள்

தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு

இலங்கை கடற்படை கப்பல் மோதி கடலில் படகு மூழ்கி உயிரிழந்த தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

5 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

37 views

இளவரசிக்கு கொரோனா உறுதி

சசிகலாவை தொடர்ந்து, அவருடன் சிறையிலிருந்த இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

37 views

தமிழக மீனவர்கள் மீது கேரள மீனவர்கள் கொடூர தாக்குதல் - கொடூரமாக தாக்கப்படும் காட்சிகள்

கேரள மாநிலம் கொச்சியில் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

201 views

ஒசூர் கொள்ளை கும்பலை, ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீசார்

ஒசூரில் நேற்று காலை தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை ஹைதராபாத் அருகே தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

79 views

கொடிகட்டிப் பறக்கும் ஆன்லைன் சூதாட்டம்

சென்னையில் மீண்டும் ஒரு ஆன்லைன் சூதாட்ட சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதைப்பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

37 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.