திருத்தணி நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.109.68 கோடியில் திட்டம் - காணொலி மூலம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
பதிவு : ஜூலை 27, 2020, 02:28 PM
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 109.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருத்தணி குடிநீர் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பாலாற்றிலிருந்து குடிநீர் வழங்கும் திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்தபடி தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 109.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருத்தணி குடிநீர் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பாலாற்றிலிருந்து  குடிநீர் வழங்கும் திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்தபடி தொடங்கி வைத்தார். அதேநேரம் திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் பி.எம்.நரசிம்மன் ஆகியோர் பங்கேற்றனர்.  இதன்மூலம் பாலாற்றில் திருப்பாற்கடல் பகுதியிலிருந்து நீர் எடுக்கப்பட்டு கிணறுகள் அமைத்து 86 கிலோ மீட்டர் தூரம் குழாய்கள் அமைத்து தினமும் 10 லட்சம் கொள்ளளவு கொண்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி தேர்ச்சி

யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி பூர்ணசுந்தரி ஐ.எப்.எஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

313 views

தமிழகத்தில் புதிதாக 5,063 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 63 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

8 views

ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வாழ்த்து

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை சிறப்பாக நடைபெற, முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

49 views

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு வெளியீடு - தேசிய அளவில் 7வது இடம் பிடித்த தமிழர்

யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வில் கன்னியாகுமரியை சேர்ந்த கணேஷ் குமார் , தேசிய அளவில் 7வது இடத்தையும் , தமிழக அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

11 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

13 views

"முருகனை தவறாக பேசியவர்களை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்" - திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம்

டெல்லியில் பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்த ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் ராகுலுடனான உறவை துண்டித்து கொள்ள வேண்டும் என்று ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

2694 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.