இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது : "உண்மையை மறைப்பது தேச துரோகம்" - ராகுல்காந்தி புகார்
பதிவு : ஜூலை 27, 2020, 02:19 PM
இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது என்றும் இந்த உண்மையை பேசுவதே தேசபக்தி என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது என்றும் இந்த உண்மையை பேசுவதே தேசபக்தி என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதே ஓர் இந்தியனாக தலையாய பணி குறிப்பிட்டுள்ளார். நமது மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது தெளிவாக தெரிவதாகவும் இது தொடர்பாக செயற்கைக்கோள் புகைப்படங்களை பார்த்த பிறகும் முன்னாள் ராணுவ வீரர்களிடம் பேசிய பிறகும் நமது மண்ணை சீனா ஆக்கிரமிக்கவில்லை என எப்படி பொய் கூற முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் தொடர்ந்து உண்மைகளை உரத்த குரலில் பேசுவேன் என வீடியோவை பதிவிட்டு, இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது. இந்த உண்மையை மறைத்து, ஆக்கிரமிப்புக்கு துணைபோவது தேசவிரோதம் என்றும் ராகுல் காந்தி ​குறிப்பிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

டுவிட்டரிலிருந்து வெளியேறிய நடிகை வனிதா விஜயகுமார்

டிவிட்டரில் நடிகை கஸ்தூரியை அவதூறாக பேசிய நடிகை வனிதா விஜயகுமார், எதிர்மறை எண்ணங்களை விதைப்பவர்கள் சமூக வலைத்தளங்களில் உள்ளதாக கூறி, டிவிட்டர், மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கை டெலிட் செய்து வெளியேறினார்.

79 views

நாடு முழுவதும் 17.5 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பதினேழரை லட்சத்தை தாண்டி உள்ளது.

55 views

மாநில அரசுகளுக்கு முழு ஜிஎஸ்டி இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது - மத்திய நிதி அமைச்சகம் தகவல்

நடப்பு நிதி ஆண்டிற்கு வழங்கப்படவேண்டிய முழு ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையும் மாநில அரசுகளுக்கு வழங்கப் பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது

52 views

ஒரே நாளில் 52,050 பேருக்கு தொற்று உறுதி - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

நாட்டில் ஒரே நாளில் 52 ஆயிரத்து 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 803 பேர் உயிரிழந்து உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .

19 views

பிற செய்திகள்

மூணாறு நிலச்சரிவு - வைகோ வேண்டுகோள்

பிற மாநிலங்களில் வாழுகின்ற தமிழகத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, மதிமுக பொது செயலாளர் வைகோ, கோரிக்கை விடுத்துள்ளார்.

84 views

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் இரங்கல்

கேரளாவில் , நிலச்சரிவு ஏற்பட்டதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

23 views

நதிநீர் இணைப்பு திட்டத்தின் நான்காம் கட்ட பணிக்கு 160 கோடி ரூபாய் ஒதுக்கீடு - முதலமைச்சருக்கு எம்பி வசந்தகுமார் நன்றி

நதிநீர் இணைப்பு திட்டத்தின் நான்காம் கட்ட பணிக்கு 160 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த முதலமைச்சருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் எம்பி வசந்தகுமார் நன்றி தெரிவித்துள்ளார்.

232 views

"ஆறுதல் கூற யாரும் நேரில் வர வேண்டாம்" - திருமாவளவன் வேண்டுகோள்

தனது சகோதரி பானுமதியின் மரணத்தால் மனவேதனையில் இருக்கும் தனக்கு ஆறுதல் கூற யாரும் நேரில் வரவேண்டாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

2323 views

"சமூக நீதிக்காக களத்தில் நின்று போராடியவர் கருணாநிதி" - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர் டி.ராஜா

சமூக நீதிக்காக களத்தில் நின்று போராடியவர் கருணாநிதி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

128 views

கொரோனா நிவாரணம் ?- ஸ்டாலின் கேள்வி

கொரோனா தடுப்புப் பணியில் உயிரிழக்கும் முன் களப் பணியாளர்களின் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை, முதலமைச்சர் உடனடியாக வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

52 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.