"ஜூலை 28,29,30 ஆகிய தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம்" - மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்
பதிவு : ஜூலை 26, 2020, 02:02 PM
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை  ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதுவை, காரைக்கால் மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருப்பதுடன் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 

சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய கூடும் என்பதால் தென்மேற்கு வங்கக்கடல் குமரிக்கடல் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு ஜூலை 28ஆம் தேதியும், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிக்கு ஜூலை 29, 30 ஆகிய தேதிகளிலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.

1273 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

476 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

470 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

139 views

பிற செய்திகள்

"சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் மத்திய அரசு கைவிட வேண்டும்" - பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்த​ல்

சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

47 views

"இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

இ-பாஸ் முறையில் தளர்வுகள் என்றும், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்கவே தான் வலியுறுத்தி வந்த தாக தெரிவித்துள்ளார்.

38 views

விநாயகர் சிலை வைக்க தமிழக அரசு தடை - தடையை மீறி இந்து முன்னணி சார்பில் சிலை பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக விநாயகர் சிலை வைக்க தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில், இந்து முன்னணி சார்பில் நெல்லை டவுணில், முதல் வினாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

71 views

சென்னை பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய இளங்கலை மற்றும் முதுகலை படிப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

65 views

"தமிழக அரசின் நிதி நிலைமை மோசமாகி விட்டது" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

தமிழக அரசின் நிதிநிலைமை வீழ்ச்சியடைந்து, மிகவும் மோசமாகி விட்டதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

36 views

தமிழகத்தில் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.