தமிழகம் முழுவதும் தளர்வில்லா ஊரடங்கு - காவல்துறையினர் வாகன தணிக்கையில் தீவிரம்
பதிவு : ஜூலை 26, 2020, 01:30 PM
மாற்றம் : ஜூலை 26, 2020, 01:33 PM
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் தளர்வில்லாத ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்படுகிறது.
தலைநகர் சென்னையில் ஆறாவது ஞாயிற்றுக் கிழமையாக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பால், மருந்து கடைகளை தவிர அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அண்ணா சாலை , பூந்தமல்லி நெடுஞ்சாலை , ஜிஎஸ்டி சாலை , மெரினா காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. தேவையின்றி வாகனங்களில் சுற்றுபவர்களை கண்காணிக்க, 288 இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. உத்தரவை மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்வதோடு, அவர்களிடம் இருந்து போலீசார், அபராதம் வசூலிக்கின்றனர். 

தூங்கா நகரில் தளர்வில்லா ஊரடங்கு அமல்

மதுரையில், இன்று தளர்வில்லா ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறியதாக 5 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றிய 48ஆயிரம் நபர்களிடம் இருந்து 70 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்து 500 ஐ கடந்துள்ளது. தற்போது வரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

4-வது வாரமாக தளர்வில்லா ஊரடங்கு அமல் 

நெல்லை மாநகரில் 4-வது ஞாயிற்றுக்கிழமையாக தளர்வில்லா ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இல்லாததால், முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காட்சி அளித்தது. நெல்லையில் கொரோனா பாதித்த 3 ஆயிரத்து 595 பேரில் 2 ஆயிரத்து 116 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆயிரத்து 458 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அமைச்சர் - உற்சாக வரவேற்பு அளித்த அதிமுகவினர்

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார்.

387 views

பிற செய்திகள்

கொரோனா பணி, தமிழகத்தில் 43 மருத்துவர்கள் உயிரிழப்பு - அதிர்ச்சி அளிப்பதாக ஸ்டாலின் டிவிட்டர் பதிவு

கொரோனா காலத்தில் தமிழகத்தில் பல மருத்துவர்கள் உயிரிழந்திருப்பதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

359 views

பழனி திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா

பழனி திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

8 views

புதிதாக 5,883 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 883 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

131 views

காமராஜர் பல்கலை. தொலைதூரக் கல்வி தேர்வில் முறைகேடு

விடைத்தாள் திருத்தும் போது தலா 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்குமாறு, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு துணை வேந்தர் பரிந்துரைத்துள்ளார்.

19 views

தஞ்சை அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா நிதியுதவி

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு, நடிகை ஜோதிகா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

244 views

ஊரடங்கால் ஏற்பட்ட வறுமையால் பறிபோன உயிர் - பூக்கடை வியாபாரி மன உளைச்சலால் தற்கொலை

ஊரடங்கால் போதிய வருமானமின்றி தவித்து வந்த பூக்கடை வியாபாரி ஒருவர் திருச்செந்தூரில் தற்கொலை செய்து கொண்டார்.

810 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.