"சுதந்திர தினத்தில் கொரோனாவிலிருந்து விடுதலை"
பதிவு : ஜூலை 26, 2020, 01:20 PM
சுதந்திர தினத்தில், கொரோனாவிலிருந்து விடுதலை பெறவும், சுயசார்பு பாரதத்தை நோக்கி பயணிக்கவும் உறுதி ஏற்போம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பேசிய அவர், கார்கில் போர் வெற்றி தினமான இன்று, உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்தார். பாகிஸ்தானோடு நட்புறவையே இந்தியா விரும்பியதாகவும், ஆனால் பாகிஸ்தான் தனது இயல்பான குணத்தின் காரணமாக இந்தியாவை முதுகில் குத்தியதாக குற்றம்சாட்டினார். ஒட்டுமொத்த உலகமே இந்திய வீரர்களின் திறமை மற்றும் வீரத்தையும் பார்த்ததாகவும் குறிப்பிட்ட மோடி, 
போர் உள்ளிட்ட காலங்களில் நாம் பேசக்கூடிய ஒவ்வொரு வார்த்தையும், செய்யக்கூடிய ஒரு செயலும், வீரர்களுக்கு மன உறுதியையும் அவர்களின் குடும்பத்திற்கு தைரியத்தையும், கௌரவத்தையும் அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்றார். கடந்த சில மாதங்களாக ஒட்டுமொத்த தேசமே கொரோனா தொற்றுக்கு எதிராக போரிட்டு வருவதாகவும் கூறிய பிரதமர், குணமடைவோர் எண்ணிக்கை மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் தான் அதிகம் என்றார். இறப்பு சதவீதமும் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது குறைவாகவே இருப்பதாக கூறிய அவர், இந்தியாவில் லட்சக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்ற முடிந்திருப்பதாக தெரிவித்தார். கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், கொரோனா, மரணத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் கூறினார். முகக் கவசம் அணிவது, 6 அடி இடைவெளி, கைகளை அடிக்கடி கழுவுவது, பொது இடங்களில் எச்சில் துப்பாமல் இருப்பது உள்ளிட்ட வழிமுறைகளை கடைபிடிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். முக கவசத்தை அகற்ற வேண்டும் என தோன்றினால், மருத்துவர்கள்,  செவிலியர்கள் நினைத்து பார்க்க வேண்டும் என்றும், மக்களை காப்பாற்ற சுகாதார பணியாளர்கள் பல மணிநேரம் முக கவசம் அணிந்து பணியாற்றுவதாக கூறினார். இந்த சுதந்திர தினத்தில் கொரோனாவில் இருந்து விடுதலை பெற நாட்டு மக்கள் அனைவரும் உறுதி ஏற்போம் என பிரதமர் குறிப்பிட்டார். இடர்பாடுகளை வாய்ப்புகளாக மாற்ற வேண்டும் என இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கிய பிரதமர் மோடி, சுதந்திர தினத்தில் சுயசார்பு பாரதத்தை நோக்கி பயணிக்க உறுதி ஏற்போம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அமைச்சர் - உற்சாக வரவேற்பு அளித்த அதிமுகவினர்

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார்.

392 views

திருமங்கலம் : முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் எம்எல்ஏக்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

160 views

பிற செய்திகள்

கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் அடுத்த திருப்பம் - சிவசங்கரனிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை மனு

கேரள மாநிலம் தங்க கடத்தல் விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளது.

24 views

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார் அமித்ஷா - சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள போவதாக அறிவிப்பு

கொரோனா பாதிப்பிலிருந்து தாம் குணமடைந்து விட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

23 views

"ஆயுதப் படை வீரர்களின் அழியாத தைரியத்திற்கு வணக்கம்" - மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிவு

இந்தியாவின் சுதந்திர தினத்திற்கு முன்னதாக, தன்னலமற்ற முறையில் தேசத்திற்கு சேவை செய்யும் நமது ஆயுதப் படைகளின் துணிச்சலான வீரர்களின் அழியாத தைரியத்திற்கு வணக்கம் செலுத்துவதாக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

20 views

"கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி" - சுதந்திர தின உரையில் ராம்நாத் கோவிந்த் பேச்சு

கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதிலும், உயிரைப் பாதுகாப்பதிலும் நாம் வெற்றி பெற்றுள்ளதாக, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

25 views

நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் புதிய திட்டம் - காணொலி மூலம் பிரதமர் மோடி துவக்கி வைப்பு

நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் வகையில் புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது.

9 views

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் வெற்றி

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் வெற்றி பெற்றார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.