"கட்டமைப்பு வசதிகளற்ற மாவட்டங்களில் மறைக்கப்பட்ட மரணங்கள் எத்தனை?" - தமிழக அரசுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேள்வி
பதிவு : ஜூலை 26, 2020, 01:03 PM
சென்னையில் 63 சதவீத கொரோனா மரணங்கள் மறைக்கப்பட்ட நிலையில், கட்டமைப்பு வசதிகளற்ற மாவட்டங்களில் மறைக்கப்பட்ட மரணங்கள் எத்தனை? என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஏப்ரல் 20ஆம் தேதி வெளியான அரசாணை எண் 196ன்படி, கொரோனா மரணங்களின் தணிக்கைக்காக 39 குழு அமைப்பதாக அறிவித்த நிலையில், இதற்காக மீண்டும் ஒரு புதிய குழு அமைக்க வேண்டியதன் அவசியம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார். உறுதியான கட்டமைப்பு இருந்தும்கூட, சென்னையில் 63 சதவீத மரணங்கள் மறைத்த நிலையில், கட்டமைப்பு வசதிகள் இல்லாத மற்ற மாவட்டங்களில் எத்தனை மரணங்கள் மறைக்கப்பட்டிருக்கும் என ஸ்டாலின் கேட்டுள்ளார். மதுரையில் கோவிட் நோய்த்தொற்று மரண எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக அங்குள்ள மயானங்கள் 24மணி நேரமும் செயல்படுவதாக தகவல் வெளியாகி இருப்பதாக அறிக்கையில் குறிப்பிட்ட ஸ்டாலின், தனது நிர்வாக தவறுகளால்,  லட்சக்கணக்கான உயிர்களுடன் அரசு விளையாடுவதாக குற்றம்சாட்டியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

நாகை எம்.பி. செல்வராசுவுக்கு கொரோனா

நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினர் செல்வராசுவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

184 views

(19/05/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தின் "வூகான்" சென்னையா?

(19/05/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தின் "வூகான்" சென்னையா? சிறப்பு விருந்தினராக - செந்தில் ஆறுமுகம், சமூக ஆர்வலர் // மகேஸ்வரி, அதிமுக

88 views

கொரோனா நோயாளிகளுக்கு முதல்வர் உத்தரவுப்படி ஆயுர்வேத மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

கொரோனா சிகிச்சைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், ஆயுர்வேத மருந்துகள் பயன்படுத்தப்படுவதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவி​த்துள்ளார்.

86 views

பிற செய்திகள்

யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி தேர்ச்சி

யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி பூர்ணசுந்தரி ஐ.எப்.எஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

529 views

தமிழகத்தில் புதிதாக 5,063 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 63 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

12 views

ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வாழ்த்து

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை சிறப்பாக நடைபெற, முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

66 views

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு வெளியீடு - தேசிய அளவில் 7வது இடம் பிடித்த தமிழர்

யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வில் கன்னியாகுமரியை சேர்ந்த கணேஷ் குமார் , தேசிய அளவில் 7வது இடத்தையும் , தமிழக அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

16 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

19 views

"முருகனை தவறாக பேசியவர்களை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்" - திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம்

டெல்லியில் பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்த ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் ராகுலுடனான உறவை துண்டித்து கொள்ள வேண்டும் என்று ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

2999 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.