நாளை முதல் ரேஷன் கடைகளில் இலவச முக கவசம்
பதிவு : ஜூலை 26, 2020, 12:05 PM
ரேஷன் கடைகளில் இலவச முக கவசம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரார்களுக்கும் இலவசமாக முக கவசம் வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, மொத்தம் உள்ள 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 குடும்ப உறுப்பினர்களில், ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு முக கவசம் வழங்கப்படும். தமிழகம் முழுவதும் மொத்தம் 13 கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 798, மறு பயன்பாடு துணி முக கவசங்கள் வழங்கப்பட உள்ளன. பருத்தி துணியால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த முக கவசத்தை, காதுகளில் மாட்டாமல், தலையின் பின்புறம் கட்டிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முக கவசத்தை துவைத்து மீண்டும், மீண்டும் பயன்படுத்தி கொள்ளலாம். சென்னை மாநகராட்சி தவிர மற்ற பகுதிகளில் வழங்க முதல்கட்டமாக 4 கோடி முக கவசங்கள் தயாராக உள்ளன. மீதமுள்ள 7 கோடி முக கவசங்களும் விரைவில்  தயாரிக்கப்பட்டு, மக்களுக்கு வழங்கப்பட உள்ள நிலையில், இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  நாளை தொடங்கி வைக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அமைச்சர் - உற்சாக வரவேற்பு அளித்த அதிமுகவினர்

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார்.

377 views

பிற செய்திகள்

"ஆறுதல் கூற யாரும் நேரில் வர வேண்டாம்" - திருமாவளவன் வேண்டுகோள்

தனது சகோதரி பானுமதியின் மரணத்தால் மனவேதனையில் இருக்கும் தனக்கு ஆறுதல் கூற யாரும் நேரில் வரவேண்டாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

1791 views

"சமூக நீதிக்காக களத்தில் நின்று போராடியவர் கருணாநிதி" - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர் டி.ராஜா

சமூக நீதிக்காக களத்தில் நின்று போராடியவர் கருணாநிதி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

100 views

வேல் பூஜை செய்யக்கோரி சுவரொட்டி ஒட்டிய பாஜகவினர் - போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலை மறியல்

வருகின்ற ஆகஸ்ட் 9 ஆம் தேதி பொதுமக்கள் அவரவர் வீடுகளில் வேல் பூஜை செய்யக்கோரி ஈரோட்டில் பாஜகவினர் சுவரொட்டிகளை நேற்று இரவு ஒட்டினர்.

686 views

கொரோனா நிவாரணம் ?- ஸ்டாலின் கேள்வி

கொரோனா தடுப்புப் பணியில் உயிரிழக்கும் முன் களப் பணியாளர்களின் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை, முதலமைச்சர் உடனடியாக வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

31 views

மகேந்திரன் மரணம் - நீதிமன்றம் சரமாரி கேள்வி

சாத்தான்குளத்தில் போலீசார் விசாரணையில் உயிரிழந்ததாக கூறப்படும் மகேந்திரன் மரணம் குறித்து ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

31 views

வேலூரில் ஹவாலா பணப்பரிமாற்றமா? - திடீரென நடந்த சோதனையால் பரபரப்பு

ஹவாலா பணப்பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் வேலூரில் ஒருங்கிணைந்த குற்றங்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.