டெல்லி எய்ம்ஸில் மனிதர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி சோதனை
பதிவு : ஜூலை 25, 2020, 10:29 AM
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் பணி தொடங்கியது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்,  கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் பணி தொடங்கியது. முதலாவதாக 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கோவாக்சின் தடுப்பூசியை போட்டு கொண்டார், மொத்தம் 5 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வீட்டிலேயே அவர்கள் 7 நாட்களுக்கு கண்காணிப்படுவார்கள் என எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

"இந்தியாவில் நாளொன்றுக்கு 10 லட்சம் கொரோனா பரிசோதனை"

இந்தியாவில் தினமும் 10 லட்சம் பிசிஆர் சோதனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், தற்போது நாளொன்றுக்கு மூன்றரை லட்சம் பரிசோதனை செய்யப்படுவதாகவும், விரைவில் நாளொன்றுக்கு 10 லட்சம் சோதனை செய்வதற்கான ஏற்பாடு நடைபெற்று வருவதாகவும் கூறினார். இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 2 புள்ளி 3% உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கொரோனாவை எதிர்த்துப் போரிடும் பாபாஜி அப்பளம்

நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து உள்ள நிலையில், மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் புதிய அப்பளம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாபாஜி என்கிற அப்பளத்தை அறிமுகம் செய்வதாகவும், இந்த அப்பளத்தில் கொரோனாவை எதிர்த்து போராடக்கூடிய பல முக்கியமான பொருட்கள் இருப்பதாகவும், இது மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

-----------------------------------------------------------------------------

தொடர்புடைய செய்திகள்

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.

1274 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

476 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

470 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

139 views

வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று

வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

34 views

பிற செய்திகள்

கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் அடுத்த திருப்பம் - சிவசங்கரனிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை மனு

கேரள மாநிலம் தங்க கடத்தல் விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளது.

24 views

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார் அமித்ஷா - சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள போவதாக அறிவிப்பு

கொரோனா பாதிப்பிலிருந்து தாம் குணமடைந்து விட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

22 views

"ஆயுதப் படை வீரர்களின் அழியாத தைரியத்திற்கு வணக்கம்" - மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிவு

இந்தியாவின் சுதந்திர தினத்திற்கு முன்னதாக, தன்னலமற்ற முறையில் தேசத்திற்கு சேவை செய்யும் நமது ஆயுதப் படைகளின் துணிச்சலான வீரர்களின் அழியாத தைரியத்திற்கு வணக்கம் செலுத்துவதாக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

20 views

"கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி" - சுதந்திர தின உரையில் ராம்நாத் கோவிந்த் பேச்சு

கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதிலும், உயிரைப் பாதுகாப்பதிலும் நாம் வெற்றி பெற்றுள்ளதாக, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

25 views

நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் புதிய திட்டம் - காணொலி மூலம் பிரதமர் மோடி துவக்கி வைப்பு

நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் வகையில் புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது.

9 views

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் வெற்றி

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் வெற்றி பெற்றார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.