சபாநாயகர் அதிகாரம் தொடர்பான வழக்கு - சபாநாயகர் அதிகாரத்தில் தலையிட வரம்பு தான் என்ன?
பதிவு : ஜூலை 25, 2020, 09:52 AM
தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என ஒரு நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், ராஜஸ்தானில் 19 எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ய கூடாது என ஒரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ஆதரவை விலக்கிக் கொள்வதாக வெற்றிவேல், தங்கத் தமிழ் செல்வன் உள்ளிட்ட 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். 

இந்த செயல் கட்சித் தாவல் நடவடிக்கை என தெரிவித்து,  செப்டம்பர் மாதம் 18 எம்.எல்.ஏ-க்களையும் தகுதி நீக்கம் செய்து,  சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார். 

இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த அப்போதைய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. 

தலைமை நீதிபதி  இந்திரா பானர்ஜி தனது தீர்ப்பில், 10 - வது அட்டவணைப்படி தகுதி நீக்க மனு மீது முடிவெடுக்கும் ஒரே அதிகாரம் சபாநாயகருக்கு மட்டுமே உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்

18 எம்.எல்.ஏ-க்களுக்கும் போதுமான வாய்ப்பு கொடுத்து தான், சபாநாயகர்  தகுதி நீக்க உத்தரவிட்டுள்ளார் என்றும்  சபாநாயகர் உள்நோக்கத்துடன் உத்தரவு பிறப்பித்தார் என்பதை 18 பேரும் நிரூபிக்கவில்லை என்றும் தலைமை நீதிபதி  இந்திரா பானர்ஜி சுட்டிக்காட்டி இருந்தார். 

இந்த வழக்கில் நீதிபதி சுந்தர் அளித்த தீர்ப்பில், பத்தாவது அட்டவணையின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தை, அரசியல் காரணங்களுக்காக சபாநாயகர் பயன்படுத்தி உள்ளார் என்ற 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பு வாதத்தில் வலு உள்ளதாகவும் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டி இருந்தார். 

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மூன்றாவது நீதிபதியாக வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், சபாநாயகர் 18 பேரை தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் இல்லை என்று கூறி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அளித்த தீர்ப்பை உறுதி செய்தார். 

இதனைத் தொடர்ந்து, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் உறுதி செய்யப்பட்டது. 

தமிழகம் போன்றே ராஜஸ்தானிலும் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறது. 

ராஜஸ்தான் முதலமைச்சருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

அந்த நோட்டீஸ் மீது​​ நடவடிக்கை எடுக்க அம்மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சபாநாயகர் நடவடிக்கை எடுக்கும் முன்பே நீதிமன்றம் தலையிட்டு, அவரது அதிகாரத்தை பயன்படுத்த விடாமல் தடுப்பு அமைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதனிடையே, உயர்நீதிமன்ற உத்தரவு, உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என கூறி வழக்கு ஒத்திவைத்துள்ளது. 

தற்போது சச்சின் பைலட் ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசும் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டு உள்ள நிலையில், பத்தாவது அட்டவணையில்  அதிரடி மாற்றங்களை செய்து தீர்ப்பு வழங்கப்படும் நிலை உருவாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன?

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன? - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்

301 views

ஊக்க மருந்து புகார் - தமிழக வீராங்கனை கோமதிக்கு 4 ஆண்டுகள் தடை

ஊக்க மருந்து புகாரில் சிக்கிய தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

197 views

டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசை- இங்கி.வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடம்

டெஸ்ட் கிரிக்கெட் ஆல் ரவுண்டர் தரவரிசையில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.

159 views

பள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

28 views

பிற செய்திகள்

விபத்துக்கு உள்ளான விமானத்தில் உள்ள லக்கேஜ் - மீட்க வந்த அமெரிக்க நிறுவன ஊழியர்கள்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் விபத்துக்கு உள்ளான விமானத்தில் இருந்து, பயணிகளின் உடமைகளை வெளியில் எடுக்க அமெரிக்க நிறுவனத்துடன், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

0 views

பஞ்சாபில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் - நவம்பர் மாதத்திற்குள் வழங்க பஞ்சாப் அரசு முடிவு

பஞ்சாப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி பயிற்சிக்காக, நாளை முதல் ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட உள்ளது.

4 views

ஐ.பி.எல். 2020 ஸ்பான்சர்ஷிப் விவகாரம் : முதன்மை ஸ்பான்சர்ஷிப்பாக மாற பதாஞ்சலி நிறுவனம் தீவிரம்

2020 ஐ.பி.எல். போட்டிக்கான நான்கு மாத கால ஸ்பான்சர்களுக்கான ஓப்பந்த அறிவிப்பை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு உள்ளது.

177 views

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வெண்டிலேட்டர் சுவாசம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வெண்டிலேட்டர் மூலம் சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

28 views

மூணாறு ராஜமலை நிலச்சரிவின் கோரம் - தேனிலவு நகரம் நரகமான சோகம்

பார்க்கும் இடமெல்லாம் பச்சைப் பசேல் என்று தேயிலை தோட்டங்களும், மனதை சில்லிடவைக்கும் குளுகுளுதென்றலும் என புதுமண தம்பதியினரின் தேனிலவு நகரமான மூணாறு, இன்று நரகமாகக் காட்சியளிக்கிறது.

40 views

சானிடைசர்கள் வைக்க அனுமதி தேவையில்லை - ஜூலை 27ஆம் தேதி முதல் அமலில் உள்ளது

சானிடைசர்கள் விற்பனை மற்றும் இருப்பு வைக்க உரிமம் பெறத் தேவையில்லை என மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

109 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.