ஆளுநர் மாளிகை வளாகத்தில் காங். ஆர்ப்பாட்டம் - ராஜஸ்தான் ஆளுநர் கடும் கண்டனம்
பதிவு : ஜூலை 25, 2020, 09:47 AM
ராஜஸ்தான் ஆளுநர் மாளிகை வளாகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், சட்டப்பேரவையை கூட்டுவது குறித்து தாம் நிபுணர்களுடன் விவாதிக்க வேண்டி இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனிடையே, ஆளுநர் மாளிகை வளாகத்தில், எம்.எல்.ஏக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியது நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சரும், உள்துறையும் பாதுகாப்பு வழங்காவிட்டால் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி விடாதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநர் தனது பாதுகாப்புக்கு எந்த துறையை அணுக வேண்டும் என்றும் அவர் வினவியுள்ளார். தவறான செயலுக்கு இது தொடக்கம் அல்லவா என்றும் ஆளுநர் வேதனை தெரிவித்துள்ளார்....

பிற செய்திகள்

"ஆறுதல் கூற யாரும் நேரில் வர வேண்டாம்" - திருமாவளவன் வேண்டுகோள்

தனது சகோதரி பானுமதியின் மரணத்தால் மனவேதனையில் இருக்கும் தனக்கு ஆறுதல் கூற யாரும் நேரில் வரவேண்டாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

1800 views

"சமூக நீதிக்காக களத்தில் நின்று போராடியவர் கருணாநிதி" - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர் டி.ராஜா

சமூக நீதிக்காக களத்தில் நின்று போராடியவர் கருணாநிதி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

102 views

கொரோனா நிவாரணம் ?- ஸ்டாலின் கேள்வி

கொரோனா தடுப்புப் பணியில் உயிரிழக்கும் முன் களப் பணியாளர்களின் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை, முதலமைச்சர் உடனடியாக வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

31 views

"கருணாநிதி பிறந்த வீட்டில் சிலை திறப்பு"

திருக்குவளையில் கருணாநிதி பிறந்த வீட்டில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையை, சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஸ்டாலின் திறந்து வைத்தார்.

335 views

"தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் விலை குறைப்புக்கு முடிவு கட்ட வேண்டும்" - பாமக நிறுவனர் ராமதாஸ்

தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் விலை குறைப்புக்கு முடிவு கட்ட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்

110 views

தென் மாவட்டங்களில் தொழில் துவங்குவதற்கு முன்வரவேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி

தென் மாவட்டங்களில் தொழில் துவங்குவதற்கு முன்வரவேண்டும் என்பதே அரசின் விருப்பம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.