"பழைய நிலையே தொடர வேண்டும்"- சச்சின் ஆதரவாளர்கள் ​தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
பதிவு : ஜூலை 25, 2020, 09:37 AM
சபாநாயகர் நோட்டீசை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பழைய நிலையே தொடர வேண்டும் என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சர் அசோக் கெலோட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய துணை முதலமைச்சர் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 பேரிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். கொறடா உத்தரவை அடுத்து தகுதிநீக்கம் தொடர்பான இந்த நோட்டீசை எதிர்த்து சச்சின் ஆதரவாளர்கள் அம்மாநில உயர்நீதிமன்றத்தை அணுகிய நிலையில், சபாநாயகர் உச்சநீதிமன்றத்தை அணுகினார். இந்நிலையில், உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க தடைவிதிக்க மறுத்த உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த வழக்கில்  தீர்ப்பளித்த ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் பழைய நி​லையே தொடர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், சச்சின் தரப்பு கோரிக்கையை ஏற்று மத்திய அரசை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டுள்ளது.

பிற செய்திகள்

இடுக்கியில் நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பலி : 12 பேர் காயங்களுடன் மீட்பு

கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

28 views

கேரளாவை விடாமல் துரத்தும் கனமழை - இடுக்கியில் 4 இடங்களில் நிலச்சரிவு

கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவை விடாமல் துரத்துகிறது கனமழை..

296 views

கேரளாவில் கனமழை - மீனாசில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு

கேரள மாநிலம் கோட்டையம் அடுத்துள்ள மீனாசில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

194 views

வெள்ளத்தில் சிக்கி இறந்த யானை - நீரியமங்கலத்தில் கரை ஒதுங்கிய உடல்

எர்ணாகுளத்தில், பெரியாற்று வனப்பகுதியில் யானையின் உடல் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. நீ

97 views

ரூ.15 கோடிக்கு அஞ்சல்துறை தங்க சேமிப்பு பத்திரம் விற்பனை - ஊரடங்கு காலத்திலும் முதலீட்டில் ஆர்வம் காட்டிய மக்கள்

கொரோனாவால் ஒட்டு மொத்த பொருளாதாரமும் முடங்கியுள்ள நிலையில் அஞ்சல் துறை தங்க சேமிப்பு பத்திரம் 15 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

3040 views

கஸ்தூரி ரங்கன் குழுவிற்கு பிரதமர் மோடி பாராட்டு

புதிய கல்விக் கொள்கை திட்டத்தை வடிவமைத்த இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவிற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

356 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.