தங்க கடத்தல் வழக்கு : திருச்சியில் உள்ள நகை கடைக்கு கடத்தல் தங்கம் விற்பனை
பதிவு : ஜூலை 25, 2020, 09:17 AM
கேரள தங்க கடத்தல் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், திருச்சியில் உள்ள நகை கடைக்கு கடத்தல் தங்கம் விற்கப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
கேரளாவில் தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சுவப்னா சுரேஷ், ரமீஸ், சந்தீப் நாயர் உள்ளிட்ட 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ ஒருபக்கம் விசாரிக்க மறுபுறம் சுங்க துறையும் விசாரித்து வருகிறது. ரமீஸ் கொடுத்த வாக்கு மூலத்தின் மூலம்  கடத்தப்பட்ட தங்கம் திருச்சியில் உள்ள பிரபல நகைக்கடை மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள சங்கிலி எனும் பகுதிக்கும் விற்கப்பட்டது தெரிய வந்தது. இந்நிலையில் திருச்சி நகை கடையில் சோதனை நடத்தவும் நகை கடை உரிமையாளருக்கு சம்மன் அனுப்பவும் என்.ஐ.ஏ அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்குமாறு என்.ஐ.ஏ கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

சிறையில் அடைக்கப்பட்டார் ஸ்வப்னா சுரேஷ்  - புதன்கிழமை விசாரணைக்கு வரும் ஸ்வப்னாவின் ஜாமீன் மனு 

கேரள தங்க கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரின் என்ஐஏ காவல் நிறைவடைந்த நிலையில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணை நிறைவடைந்த பிறகு 2 பேரும் கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை ரிமாண்ட் செய்ய நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனு வரும் புதன் கிழமை விசாரணைக்கு வர உள்ளது. 
விசாரணையின் போது, சுவப்னா சுரேஷின் வங்கி லாக்கரில் இருந்து 1 கோடி ரூபாயும், ஒரு கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டதாக என்ஐஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

பொதுமக்கள் முற்றுகையிட்டதால் மனவேதனை - கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை முயற்சி

கேரளாவில் பெண் கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

206 views

2-ஆக உடைந்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு - டெல்லி கொண்டு செல்ல முடிவு

கோழிக்கோடில் 2ஆக உடைந்து விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது.

115 views

விமான விபத்து - காயமடைந்தவர்களை காரில் அழைத்து சென்று உதவிய உள்ளூர்வாசிகள்

கோழிக்கோடு விமான விபத்தின் போது மீட்பு பணிகள் எப்படி நடைபெற்றன என்பது பற்றிய வீடியோக்கள் தற்போது வெளியாகி வருகின்றன.

78 views

பிற செய்திகள்

சானிடைசர்கள் வைக்க அனுமதி தேவையில்லை - ஜூலை 27ஆம் தேதி முதல் அமலில் உள்ளது

சானிடைசர்கள் விற்பனை மற்றும் இருப்பு வைக்க உரிமம் பெறத் தேவையில்லை என மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

62 views

சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை - கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி

சபரிமலையில் இந்த வருடத்திற்கான மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்கு கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

32 views

"பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க தடை" - புதுச்சேரி மாவட்ட ஆட்சியர்

புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்கள் மற்றும் கோவில்களில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

40 views

பொதுமக்கள் முற்றுகையிட்டதால் மனவேதனை - கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை முயற்சி

கேரளாவில் பெண் கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

206 views

புதுச்சேரி கல்வி அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கமலக்கண்ணன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

20 views

கொரோனாவில் இருந்து மீண்ட கர்நாடகா முதல்வர் எடியூரப்பா - விரைவில் பணிக்கு திரும்புவேன் என டிவிட்டர் பதிவு

கர்நாடகா முதல்வர் எடியூரப்பா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார். கடந்த 2ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட எடியூரப்பா , பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.