சாலை விபத்தில் கவிழ்ந்த முட்டை ஏற்றிச்சென்ற ஆட்டோ - உடைந்த முட்டைகளை கையால் அள்ளி அகற்றிய தலைமை பெண் காவலர்
பதிவு : ஜூலை 25, 2020, 08:58 AM
மாற்றம் : ஜூலை 25, 2020, 09:05 AM
மதுரையில் சாலை விபத்தில் விழுந்து உடைந்த முட்டையால் நடக்க இருந்த விபத்தை தடுக்க உடைந்த முட்டை கழிவுகளை பெண் போக்குவரத்து தலைமை காவலர் தனது கைகளால் அள்ளி அகற்றினார்.
மதுரையில் சாலை விபத்தில் விழுந்து உடைந்த முட்டையால்  நடக்க இருந்த விபத்தை தடுக்க உடைந்த முட்டை கழிவுகளை,பெண் போக்குவரத்து தலைமை காவலர்,தனது கைகளால் அள்ளி அகற்றினார். தாமரை தொட்டி பகுதியில், 5000 க்கும் மேற்பட்ட முட்டைகளை ஏற்றி வந்த சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது 500 க்கும் மேற்பட்ட முட்டைகள் உடைந்து சாலையில் ஓடியது. இதனால் அவ்வழியே வந்த இருசக்கர வாகனங்கள்   விபத்திற்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டதால், அதை தலைமை காவலராக மீனா,தனது கைகளால் அள்ளி அகற்றினர்.

"ஈரோட்டில் 25,000 பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்"- மாவட்ட ஆட்சியர் கதிரவன் தகவல்


ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, 140 இடங்களில், 25,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக என மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார். நேற்று 564 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் 416 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். 135 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் இதுவரை 69 ஆயிரத்து 293 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

"திருவனந்தபுரம்  கவுன்சிலர்கள் 7 பேருக்கு கொரோனா"  - தனிமைப்படுத்தி கொண்ட திருவனந்தபுரம் மேயர்


கேரளாவில்  திருவனந்தபுரம் மாநகராட்சியில் உள்ள 7 கவுன்சிலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து   மேயர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். அங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வருகிற 27ந்தேதி நடைபெற இருந்த சட்டசபை கூட்டத்தொடரை ரத்து செய்வது என அமைச்சரவை முடிவு செய்துள்ளது.  வரும் திங்கட்கிழமை சிறப்பு அமைச்சரவை கூட்டம்  நடைபெறும் என்றும், இதில், கேரளாவில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது பற்றி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

"கேரளாவில் புதிதாக 885 பேருக்கு கொரோனா தொற்று உறுதி"  - முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் வெள்ளிக்கிழமையன்று புதிதாக மேலும் 885 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 995 ஆக உயர்ந்துள்ளதாக, முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  கேரளாவில் கொரோனாவால் இதுவரை 54 பேர் உயிரிழந்ததாகவும், ஒரே நாளில் 968 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் கூறியுள்ளார். 9 ஆயிரத்து 371 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும்,  நோய் தீவிரமுள்ள பகுதியான ஹாட்ஸ் பாட் எண்ணிக்கை  453 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

வனப்பகுதிகளில் நடந்தே சென்று பணியாற்றிய தபால் ஊழியர் - ரூ.1 லட்சம் பரிசு வழங்கி கவுரவித்த எம்.பி. 

நிலகிரி மாவட்டம் குன்னூர் வனப்பகுதிகள் வழியே நடந்தே சென்று தபால் பட்டுவாடா செய்த தபால் ஊழியருக்​கு மாநிலங்களவை உறுப்பினர், ராஜீவ்சந்திர சேகர் 1 லட்ச ரூபாய்  பரிசு வழங்கி கவுரவித்துள்ளார். நீலகிரி ஹில்குரோவ் தபால் நிலையத்தில் 20 ஆண்டுகள் கிராம தபால்காரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சிவன். இவரின் சேவை குறித்து அறிந்த கர்நாடக மாநில எம்பியான ராஜீவ் சந்திரசேகர் தபால் ஊழியர் சிவனின் வங்கிக் கணக்கில் ஒரு லட்ச ரூபாயை செலுத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன?

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன? - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்

268 views

ஊக்க மருந்து புகார் - தமிழக வீராங்கனை கோமதிக்கு 4 ஆண்டுகள் தடை

ஊக்க மருந்து புகாரில் சிக்கிய தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

183 views

டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசை- இங்கி.வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடம்

டெஸ்ட் கிரிக்கெட் ஆல் ரவுண்டர் தரவரிசையில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.

142 views

(14/05/2020) ஆயுத எழுத்து - விரியும் கோயம்பேடு கொரோனா : யார் காரணம்?

(14/05/2020) ஆயுத எழுத்து - விரியும் கோயம்பேடு கொரோனா : யார் காரணம்? - சிறப்பு விருந்தினராக - மருது அழகுராஜ், அதிமுக // கலாநிதி வீராசாமி, திமுக எம்.பி // விக்கிரமராஜா, வணிகர் ச.பேரமைப்பு // கருணாநிதி, காவல்துறை(ஓய்வு)

56 views

"கொழும்பு துறைமுக கிழக்கு முனை விவகாரம்- இன்னும் தீர்மானிக்கவில்லை" -இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச

இலங்கையின் வடக்கு கடல் பரப்பில்​, இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச கவலை தெரிவித்துள்ளார்.

39 views

(19/05/2020) ஆயுத எழுத்து -10ம் வகுப்பு தேர்வு : அவசரமா?அவசியமா?

(19/05/2020) ஆயுத எழுத்து -10ம் வகுப்பு தேர்வு : அவசரமா?அவசியமா? - சிறப்பு விருந்தினராக - பேட்ரிக் ரெய்மண்ட், ஆசிரியர் சங்கம் // மகேஸ்வரி, அதிமுக // மாலதி, கல்வியாளர் // எழிலரசன், திமுக எம்.எல்.ஏ

34 views

பிற செய்திகள்

யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி தேர்ச்சி

யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி பூர்ணசுந்தரி ஐ.எப்.எஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

541 views

தமிழகத்தில் புதிதாக 5,063 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 63 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

12 views

ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வாழ்த்து

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை சிறப்பாக நடைபெற, முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

67 views

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு வெளியீடு - தேசிய அளவில் 7வது இடம் பிடித்த தமிழர்

யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வில் கன்னியாகுமரியை சேர்ந்த கணேஷ் குமார் , தேசிய அளவில் 7வது இடத்தையும் , தமிழக அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

16 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

21 views

"முருகனை தவறாக பேசியவர்களை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்" - திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம்

டெல்லியில் பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்த ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் ராகுலுடனான உறவை துண்டித்து கொள்ள வேண்டும் என்று ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

3015 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.