ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவன நில விவகாரம்: "தற்போது நிலத்துக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது" - உயர் நீதிமன்றம்
பதிவு : ஜூலை 23, 2020, 02:27 PM
ஊட்டி ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவன நிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கும் பணிகளுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
நீலகிரி மாவட்டம்  ஊட்டியில் 1967 ஜனவரி 7-ல் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது.  இந்த நிறுவனத்திற்காக, தமிழக அரசால், மத்திய அரசுக்கு 333.30 ஏக்கர் நிலம் வென்லாக்டவுன்ஸ் மற்றும் புரூக்காம்ப்டன் ஆகிய காப்புக் காடுகளின் பகுதியில் இருந்து இலவசமாக ஒதுக்கப்பட்டது. இந்நிலையில்,  ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனத்தின் பணிகள் மட்டும் நிறுத்தப்பட்டதை அடுத்து,  அந்நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை எடுக்க ஆட்சியர் மூலம் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு,  சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.   இந்து​ஸ்தான் நிறுவனம் சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன், மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்வதோடு, ஆட்சிய​ர் உத்தரவின் அடிப்படையில் நடக்கும் அனைத்து பணிகளுக்கும் தடைவிதிக்க வேண்டுமென வாதிட்டார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு  தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், அந்த இடத்தில் ஊட்டி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டபட்டு விட்டதாக விளக்கம் அளித்தார். 
இதற்கு  மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒப்புதல் அளித்து உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். அனைத்து பணிகளுக்கும் தடைவிதிக்க மறுத்த நீதிபதி, ஊட்டியில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான பணிகள் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என தெரிவித்தார். இறுதி தீர்ப்பு வரும் வரை அந்த நிலத்துக்கு யாரும்  உரிமை கோர முடியாது எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன?

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன? - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்

301 views

ஊக்க மருந்து புகார் - தமிழக வீராங்கனை கோமதிக்கு 4 ஆண்டுகள் தடை

ஊக்க மருந்து புகாரில் சிக்கிய தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

197 views

டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசை- இங்கி.வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடம்

டெஸ்ட் கிரிக்கெட் ஆல் ரவுண்டர் தரவரிசையில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.

159 views

பள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

28 views

பிற செய்திகள்

முழுக் கொள்ளளவை நெருங்கும் பவானி அணை- வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் முழுக்கொள்ளவான 102 அடியில் 101 அடியை எட்டியதை தொடர்ந்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

4 views

சென்னையில் கஞ்சா மொத்த விற்பனை - பெண் உட்பட 4 கஞ்சா வியாபாரிகள் கைது

ஆந்திராவில் இருந்து கஞ்சா மூட்டைகளை கொண்டு வந்து சென்னை வண்ணாரப் பேட்டையில் மொத்த விற்பனை செய்த கஞ்சா வியாபாரிகள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

51 views

ஓட ஓட விரட்டி இளைஞர் குத்தி கொலை - கஞ்சா தர மறுத்ததால் நடந்த விபரீதம்

தாம்பரம் அருகே கஞ்சா தர மறுத்ததால் இளைஞர் ஓட ஓட விரட்டி குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

23 views

கொரோனா நோய் தொற்று உறுதியானதால் அதிர்ச்சி- மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 52 வயது பெண்மணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

161 views

காவலர்கள் பணியிட மாற்றம் - விருப்ப மனுக்களை உடனடியாக பெற உத்தரவு

சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரை பணியிட மாற்றம் தொடர்பான விருப்ப விவரங்களை பெற்று உடனடியாக காவல் ஆணையர் அலுவலகம் அனுப்ப காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

73 views

(11/08/2020) ஊர்ப்பக்கம்

(11/08/2020) ஊர்ப்பக்கம்

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.