தங்க கடத்தல் வழக்கு - விசாரணை அதிகாரிகள் 8 பேர் பணியிட மாற்றம்
பதிவு : ஜூலை 23, 2020, 10:57 AM
கேரள தங்கக் கடத்தல் வழக்கை விசாரித்து வரும் சுங்கத்துறை அதிகாரிகள் 8 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கேரள தங்கக் கடத்தல் வழக்கை விசாரித்து வரும் சுங்கத்துறை அதிகாரிகள் 8 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், ஷரித் ஆகியோரிடம் என்ஐஏ காவலில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், சுங்கத்துறை அதிகாரிகளும் இவர்களிடம் இன்று விசாரணை நடத்த உள்ளனர். இதனிடையே சுங்கத்துறை அதிகாரிகளில் 6 கண்காணிப்பாளர்கள், 2 ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்வப்னா சுரேஷின் 6 செல்போன்கள் லேப்டாப்கள் பறிமுதல்

ஸ்வப்னா சுரேஷின் 6 மொபைல் போன்கள் இரண்டு லேப்டாப்கள் என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றிய நிலையில், செல்போன் லாக் செய்யப்பட்டிருப்பதால், தொழில்நுட்ப துறையின் உதவியோடு பரிசோதனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
ஏற்கனவே  இரண்டு லேப்டாப்புகளை கைப்பற்றி பரிசோதனை மேற்கொண்ட போது, பல தடயங்கள் சிக்கியதாகவும், பல தகவல்கள் அழிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில், தங்கக் கடத்தல் மூலமாக கிடைத்த  நிதியை பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக என்ஐஏ  துணை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ண பிள்ளை தெரிவித்துள்ளார் .

தொடர்புடைய செய்திகள்

கேரளா தங்க கடத்தல் - தமிழகம் நோக்கி திரும்பியுள்ள விசாரணை

கொரோனாவுக்கு மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கேரளா தங்க கடத்தல் குறித்து விசாரணை செய்துவரும் தேசிய புலனாய்வு அமைப்பின் பார்வை தற்போது தமிழகம் நோக்கி திரும்பியுள்ளது.

1788 views

பிற செய்திகள்

ராமர் கோயில் கட்டும் கனவு நிறைவேறியுள்ளது - எல்.கே.அத்வானி

1990ஆம் ஆண்டில், ராமஜன்ம பூமி இயக்கத்தின் போது, ​​ராம ரத யாத்திரை வடிவத்தில் முக்கிய கடமையை செய்து, அதன் மூலம் எண்ணற்றவர்களை ஒருங்கிணைக்க உதவியதை நினைத்து பெருமிதம் கொள்வதாக பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

402 views

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

45 views

மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து - அலறியடித்து ஓட்டம் பிடித்த தொழிலாளர்கள்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை அடுத்த அச்சுதாபுரத்தில் மருத்து தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

8 views

"அயோத்தியில் ராமர் கோவில் : "தேசிய ஒற்றுமை நிகழ்வாக மாறியுள்ளது" - காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா

எளிமை, தைரியம், கட்டுப்பாடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை தீன்பந்து ராமா என்ற பெயரின் சாராம்சம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா தெரிவித்துள்ளார்.

2542 views

ஒரே நாளில் 52,050 பேருக்கு தொற்று உறுதி - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

நாட்டில் ஒரே நாளில் 52 ஆயிரத்து 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 803 பேர் உயிரிழந்து உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .

16 views

இலங்கையில் பிரசித்தி பெற்ற சீதையம்மன் கோயில் - சீதையை ராவணன் சிறை வைத்த இடம்

இலங்கையில் உள்ள பிரசித்தி பெற்ற சீதையம்மன் கோயில்' பற்றிப் பார்க்கலாம்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.