டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 29 பேர் பலி
பதிவு : ஜூலை 23, 2020, 10:50 AM
டெல்லியில் கொரோனாவிலிருந்து கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 532 பேர் குணமடைந்துள்ளனர்.
டெல்லியில் கொரோனாவிலிருந்து கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 532 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை 1 லட்சத்து ஏழாயிரத்து 650 பேர் குணமடைந்துள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 227 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் 
மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 323 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை மூவாயிரத்து 719ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் இதுவரை 85 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் புதிதாக 1,038 பேருக்கு கொரோனா - முதலமைச்சர் பினராயி விஜயன் பேட்டி

கேரளாவில் புதிதாக ஆயிரத்து 38 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும்,  இதுவரை 15 ஆயிரத்து 32 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டியளித்துள்ளார். இவர்களில் 87 வெளிநாடுகளிலிருந்தும் 109 பேர் வெளி மாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள் என்று குறிப்பிட்ட அவர், 272 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்தார். தற்போது கேரளாவில் 8 ஆயிரத்து 818 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் பெரிய ஜீயருக்கு கொரோனா - சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோவில் பெரிய ஜீயர் , சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அல்லாமல் , கொரோனா வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவரது உடலில் ஆக்சிஜன் அளவு கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பாதித்தவர்களை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வரவில்லை - தொற்று உறுதியாகி 2 நாட்களை கடந்த நிலையில் அவதி

ஆந்திர மாநிலம்  அனந்தபுரத்தில் உள்ள டிரைவர்ஸ் காலனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் ஆம்புலன்ஸ் வந்து அவர்களை அழைத்துச் செல்லும் என்றும் அவர்களிடம் சுகாதாரத்துறையினர் இரண்டு நாட்களுக்கு முன்பு கூறிய நிலையில், இதுவரை யாரும் அவர்களை வந்து அழைத்துச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த குடும்பத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தங்களைக் காக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு இதுதொடர்பா வீடியோ ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

நாளை பட்ஜெட் தாக்கல் - கிரண்பேடி ஒப்புதல்

புதுச்சேரியில், 2020 - 21 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். நாளை காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரை நிகழ்த்துவார் என்று, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கூட்டத்தொடரை தொடங்கி  வைக்க கிரண்பேடி வரமறுத்த நிலையில், துணைநிலை ஆளுநர் உரை இல்லாமலேயே, கடந்த திங்களன்று, முதலமைச்சர் நாராயணசாமி, பட்ஜெட்டை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

அஸ்ஸாமில் பெய்து வரும் தொடர் கனமழை - "பிரம்மபுத்திரா நதியில் அபாயக்கட்டத்தை தாண்டிச்செல்லும்  வெள்ளம்"

அஸ்ஸாமில் பெய்து வரும் தொடர் கனமழையால், பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம், அபாயக்கட்டத்தை தாண்டிச்செல்கிறது. குவஹாத்தியில் உள்ள பிரம்மபுத்ரா நதியில், குறிப்பிட்ட அளவைத்தாண்டி, 8 சென்டிமீட்டர் உயரத்தில் தண்ணீர் செல்வதாக,மத்திய நீர் வள ஆணையத்தின் அதிகாரி, ஜிது மோனி தாஸ் தெரிவித்துள்ளார். நீர் மட்டம், மணிக்கு 2 சென்டி மீட்டர் வரை உயர்ந்து வருவதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அசாமில் கனமழை... 26 மாவட்டங்களில் பாதிப்பு...

அசாமில் பெய்து வரும் கனமழையால் அந்த மாநிலத்தில் உள்ள 26 மாவட்டங்கள், மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், நிவாரண முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  திப்ரூகார் அருகில் உள்ள ரங்மோலா, மிரி உள்ளிட்ட கிராமங்களில் பிரம்மபுத்திரா ஆற்றின் வெள்ளம் புகுந்துள்ளது. அந்த மாநிலத்தில் கனமழை மற்றும் பெரு வெள்ளத்துக்கு இதுவரை 89 பேர் பலியாகி உள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது.

வெள்ளத்தால் கடும் பாதிப்பு - ரஷ்ய அதிபர் புதின் இரங்கல்..

அசாம் உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர் மழை மற்றும் வெள்ளத்துக்கு பலியான மக்களுக்கு ரஷ்ய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரிடம் தனது இரங்கலை தெரிவித்துள்ள அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் விரைவில் இழப்பில் இருந்து மீள வேண்டும் எனவும் வெள்ளத்தில் காயமடைந்த மக்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"எதிர்காலத்தில் எச்.ஐ.வி, டெங்குவிற்கும் பரிசோதனை 10 லட்சமாக உயரும்" - பிரதமர்

அதிவேக பரிசோதனை ஆய்வகங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்த பின் பேசிய பிரதமர் மோடி, இந்த ஆய்வகங்கள் மூலம் எதிர்காலத்தில் எச்.ஐ.வி , டெங்கு உள்ளிட்ட சோதனைகளும் மேற்கொள்ள முடியும் என கூறினார்.

2359 views

"வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவு" - பிரதமர் மோடி

சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால் வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

131 views

கொரோனா தாக்கத்திற்கு பிறகு ரக்பி போட்டி - கரகோஷம் எழுப்பி ரசிகர்கள் ஆராவாரம்

கொரோனா தாக்கத்திற்கு பிறகு நியூசிலாந்தில் நடந்த ரக்பி போட்டி திருவிழா போல் காட்சியளித்தது .

19 views

பிற செய்திகள்

புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்குவோம் - மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

புதுச்சேரியில் ஆட்சி அமைத்திடும் சூழலை உருவாக்குவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

200 views

அனுமான் கடி கோயிலில் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் சாமி தரிசனம்

அயோத்தியில் உள்ள அனுமான் கடி கோயிலில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சாமி தரிசனம் செய்தார்.

8 views

"ஆன்லைன் பணப் பரிவர்த்தனையில் ரூ.2.90 லட்சம் கோடி" - தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

ஆன்லைன் பரிவர்த்தனைகளில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஜூலை மாதத்தில் 2 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

182 views

மோடி தலைமையில் ராம் ராஜ்யம் அமையும் என்ற நம்பிக்கை வந்துள்ளது - ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

பிரதமர் மோடி ஆட்சியின் கீழ், இந்தியாவில் ராம ராஜ்யம் அமையும் என்ற நம்பிக்கை தமக்கு வந்துள்ளதாக ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

6 views

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,972 பேருக்கு கொரோனா தொற்று.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52 ஆயிரத்து 972 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

5 views

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா - வழக்கு தொடர்ந்த இக்பால் அன்சாரிக்கு அழைப்பு

ராமர் கோயில் பூமி பூஜைக்கு, அயோத்தி விவகாரத்தில் வழக்கு தொடர்ந்த இக்பால் அன்சாரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.