திருமணத்தில் பங்கேற்றவர் மூலம் பரவிய கொரோனா - புதுமண தம்பதி உட்பட 15 பேருக்கு கொரோனா
பதிவு : ஜூலை 23, 2020, 09:49 AM
கன்னியாகுமரி மாவட்டம் மேட்டுக்கடை சரவிளை பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சில தினங்களுக்கு முன் அவர் சென்று வந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சோதனை நடத்தப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் மேட்டுக்கடை சரவிளை பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சில தினங்களுக்கு முன் அவர் சென்று வந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சோதனை நடத்தப்பட்டது. அதில், புதுமண தம்பதி மற்றும் 4 சிறுவர்கள் உட்பட 15 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது, இதனை தொடர்ந்து  அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்


முழு ஊரடங்கு - கடைகளில் குவிந்த பொதுமக்கள்

கொடைக்கானல் பகுதியில்  ஒரு வாரம்முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையில் பொருட்களை வாங்குவதற்காக பல்வேறு தெருக்களில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்ததின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் மளிகை, காய்கறி மற்றும் பழக்கடைகளில் கூட்டம் அலைமோதியது, இதனை தொடர்ந்து போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர்

டாஸ்மாக் கடையை 1 மணி நேரம் முன்பாக மூட உத்தரவு

புதுக்கோட்டை, அறந்தாங்கி, கரம்பக்குடி மற்றும் பரம்பூரில் உள்ள 29 டாஸ்மாக் கடைகளை மறு உத்தரவு வரும் வரை மாலை 7 மணிக்கு மூட உத்தரவு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை

விருதுநகர் மாவட்டம்,  ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  பலத்த காற்று வீசியதால் வீட்டின் ஓடுகள் காற்றில் பறந்தன. 

2 மணி நேரத்துக்கு மேல் கனமழை - விவசாயிகள் மகிழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்துக்கு மேல் கன மழை பெய்தது. அதன் காரணமாக, பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. கனமழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அனுமதி இன்றி மணல் திருட முயன்ற லாரி பறிமுதல்

சேலத்தில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில், அனுமதி இன்றி  மணல் திருட முயன்ற லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  அயோத்தியாபட்டணம் அருகே மாசிநாயக்கன்பட்டியில், முருகன் என்பவர் சட்டவிரோதமாக மணல் அள்ளி வருவதாக வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குதிரை உயிருடன் மீட்பு

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் தண்ணீர் தொட்டியில் விழுந்த குதிரையை பல மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர்  மீட்டனர்.  கட்டுமான பணி நடைபெற்று இடத்தில் இருந்த  தொட்டியில் தண்ணீர் குடிக்க முயன்ற பொழுது தவறி விழுந்துள்ளது.  

செல்லப்பிராணிகளை பறிமுதல் செய்ய இடைக்காலத் தடை - விலங்குகள் நல வாரியத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நாய்களை இனப்பெருக்கம் செய்ய வைப்பது மற்றும் விற்பனை செய்வது மிருக வதை என பறிமுதல் செய்ய விலங்குகள் நல வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கொரோனா அச்சத்தில் உள்ள நிலையில், செல்லப்பிராணிகளை அபகரித்து சென்று விடுவார்கள் என்ற பயத்தை ஏற்படுத்த விரும்பவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

தண்ணீர் லாரி மோதி பெண் காவலர் உயிரிழப்பு

மதுரை அலங்காநல்லூர் அருகே, பெண் காவலர் மீது தண்ணீர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அலங்காநல்லூர் அருகே உள்ள கல்லணை கிராமத்தை சேர்ந்த கார்த்திகாயினி, பணி முடிந்து  இரு சக்கர வாகனத்தில் திரும்புகையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், உறவினர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

தகாத உறவு காரணமாக ஆட்டோ ஓட்டுநர் வெட்டி படுகொலை

தூத்துக்குடியில் பிரேம்குமார் என்கிற ஆட்டோ ஓட்டுநரை வெட்டி கொலை செய்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள விக்னேஸ்வரன் என்பவர் மனைவியுடன், பிரேம்குமாருக்கு தகாத உறவு இருந்துள்ளது. பலமுறை கண்டித்தும் கேட்காத காரணத்தால் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாக  போலீசார் தெரிவித்தனர்.

கொள்முதல் விலை குறைத்து நிர்ணயம்- விவசாயிகள் போராட்டம்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் விலை  குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டதை கண்டித்து வந்தவாசி  விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாக வேண்டிய குண்டு ரகம் 900 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டதால், போராட்டத்தில் இறங்கினர்.


மரணங்களை மறைக்காதே என்றால் அரசியலா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி

கொரோனா மரணங்களை மறைக்காதே என்றால், அரசியல் செய்வதாக குற்றம் சாட்டுகிறார்கள் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மார்ச் முதல் விடுபட்ட 444 கொரோனா மரணங்களை இன்று சொல்வதாகவும் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்தது யார்? தொற்றேதும் பரவியதா? மனித உயிரொன்றும் துச்சமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

"ஆன்லைன் வகுப்பு - ஆய்வுகள் அதிர்ச்சியளிக்கிறது" - கடமையை அரசு தட்டிக்கழிக்கக் கூடாது - உதயநிதி

மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கும், சமமாக கல்வியளிக்கும் கடமையை அரசு தட்டிக்கழிக்கக் கூடாது என  திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க இயலாத பார்வை மற்றும் கேட்கும் திறன் குறைந்த 43 சதவீத மாற்றுத்திறனாளி மாணவர்கள் இடைநிற்றல் ஆக வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுவது அதிர்ச்சி அளிப்பதாக அவர், குறிப்பிட்டுள்ளார். 

"ஆட்சி காலத்தில் கடுமையான மின்வெட்டு": தற்போது போராடுவதாக? - அமைச்சர் பாண்டியராஜன் கேள்வி

மின் கட்டணம் தொடர்பான திமுகவின் போராடத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை எருக்கஞ்சேரியில் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி பேசிய அவர், ஆட்சியில் இருந்த காலத்தில் கடுமையான மின்வெட்டை ஏற்படுத்திவிட்டு, தற்போது பதாகையை பிடித்து திமுக போராடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என விமர்சித்துள்ளார்.

தமிழறிஞர் கோவை ஞானி இயற்கை எய்தினார் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல்

கோவையை சேர்ந்த எழுத்தாளரும், ஆய்வறிஞருமான கோவை ஞானியின் மறைவுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கோவை ஞானி அவர்களின் மறைவு செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

ஹேக் செய்யப்பட்ட சரத்குமார் செல்ஃபோன் எண் - குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டுகோள்

தனது செல்ஃபோன் எண் ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக, முதலமைச்சர் மற்றும் தமிழக காவல்துறை இயக்குனருக்கும் கடிதம் எழுதி உள்ளதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்தகைய குற்றச்செயல்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும் எனவும் எந்த Software பயன்படுத்தி ஹேக் செய்யப்பட்டது என்பதை கண்டறிந்து உடனடியாக தடை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். தகவல்களை திருடும் சமூக விரோதிகளுக்கு உரிய தண்டனை வழங்கி பாடம் புகட்ட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். 

மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாக்கள் - இணையத்தில் ஒளிபரப்ப பக்தர்கள் கோரிக்கை 

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாக்களை, இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆண்டின் 12 மாதங்களும் திருவிழா நடப்பது கோயிலின் சிறப்பாக உள்ள நிலையில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை போலவே, கோயிலின் அனைத்து திருவிழாக்களையும், இணையதளத்தில் ஒளிபரப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிபூர திருவிழா - 7 ஆம் திருநாளில் சயனசேவை நடைபெற்றது 

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் ஆடிபூர திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின்  ஏழாம் திருநாளான நேற்று, அருகில் உள்ள கிருஷ்ணன்கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மடியில், ஸ்ரீ ரெங்கமன்னார் தலை வைத்து இருக்கும் சயனசேவை நடைபெற்றது. பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,  திருக்கோயில் ஸ்தலத்தார் மற்றும் அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன?

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன? - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்

301 views

ஊக்க மருந்து புகார் - தமிழக வீராங்கனை கோமதிக்கு 4 ஆண்டுகள் தடை

ஊக்க மருந்து புகாரில் சிக்கிய தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

197 views

டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசை- இங்கி.வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடம்

டெஸ்ட் கிரிக்கெட் ஆல் ரவுண்டர் தரவரிசையில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.

159 views

பள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

28 views

பிற செய்திகள்

முழுக் கொள்ளளவை நெருங்கும் பவானி அணை- வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் முழுக்கொள்ளவான 102 அடியில் 101 அடியை எட்டியதை தொடர்ந்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

4 views

சென்னையில் கஞ்சா மொத்த விற்பனை - பெண் உட்பட 4 கஞ்சா வியாபாரிகள் கைது

ஆந்திராவில் இருந்து கஞ்சா மூட்டைகளை கொண்டு வந்து சென்னை வண்ணாரப் பேட்டையில் மொத்த விற்பனை செய்த கஞ்சா வியாபாரிகள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

51 views

ஓட ஓட விரட்டி இளைஞர் குத்தி கொலை - கஞ்சா தர மறுத்ததால் நடந்த விபரீதம்

தாம்பரம் அருகே கஞ்சா தர மறுத்ததால் இளைஞர் ஓட ஓட விரட்டி குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

22 views

கொரோனா நோய் தொற்று உறுதியானதால் அதிர்ச்சி- மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 52 வயது பெண்மணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

159 views

காவலர்கள் பணியிட மாற்றம் - விருப்ப மனுக்களை உடனடியாக பெற உத்தரவு

சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரை பணியிட மாற்றம் தொடர்பான விருப்ப விவரங்களை பெற்று உடனடியாக காவல் ஆணையர் அலுவலகம் அனுப்ப காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

72 views

(11/08/2020) ஊர்ப்பக்கம்

(11/08/2020) ஊர்ப்பக்கம்

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.