வடிவேலு படப்பாணியில் அரிசிக்கடையில் கொள்ளை - கொள்ளையர்களை தேடி வருகிறது போலீஸ்
பதிவு : ஜூலை 23, 2020, 09:29 AM
வடிவேலு படப்பாணியில் அரிசி வாங்குவது போல், கடை உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பி, 75 ஆயிரம் ரூபாயை கொள்ளையர்கள் திருடிச் சென்ற சம்பவம், சென்னையில் அரங்கேறியுள்ளது.
வடிவேலு படப்பாணியில் அரிசி வாங்குவது போல், கடை உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பி, 75 ஆயிரம் ரூபாயை கொள்ளையர்கள் திருடிச் சென்ற சம்பவம், சென்னையில் அரங்கேறியுள்ளது.

நடிகர் வடிவேலு கருப்பசாமி குத்தகைதாரர் என்ற படத்தில் அரிசி வாங்குவது போல் வந்து, கடைக்காரர் அரிசியை எடுக்கும் போது, எடைக்கற்களை திருடி சென்றுவிடுவார். திரைப்படத்தில் வரும் இந்த கற்பனை காட்சியைப்போன்று, உண்மை சம்பவம் ஒன்று சென்னை தரமணியில் நடந்துள்ளது.

சென்னை தரமணி பகுதியில் அரிசி கடை நடத்தி  வரும் சந்திரன் என்பவரின் கடைக்கு, 2 வாலிபர்கள் அரிசி வாங்க வந்துள்ளனர். அப்போது, பச்சரிசி, பிரியாணி அரிசியை எடுங்கள் என்று கேட்டுள்ளனர். ஒவ்வொரு அரிசியாக சந்திரன் எடுத்து காட்ட, இது நல்லா இல்லை, வேறு அரிசி காட்டுங்கள் என்று கூறியுள்ளனர். அரிசி வகைகளை பார்த்துவிட்டு 3 அரிசி மூட்டைகளை எடுத்து வையுங்கள். ஏ.டி.எம்.மிற்கு சென்று பணத்தை கொண்டு வருவதாக கூறிவிட்டு சென்றுவிட்டனர்.  அரிசி மூட்டைகளை எடுத்து வைத்துவிட்டு கடைகாரர் நீண்ட நேரமாக காத்திருந்தார். அவர்கள் வராத நிலையில், வியாபாரம் செய்த பணத்தை எடுக்க கல்லாப்பெட்டிக்கு  சென்றார். அப்போது கல்லாவில் 
வைத்திருந்த 75 ஆயிரம் ரூபாய் பணம், மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

அரிசி வாங்குவது போல் நீண்ட நேரமாக தன்னிடம் பேச்சு கொடுத்த இருவர் பணத்தை எடுத்து சென்றதை அறிந்து, தரமணி காவல்நிலையத்தில்  புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த தரமணி போலீசார், திரைப்பட பாணியில் கைவரிசை காட்டிய இருவர் குறித்து விசாரித்து வருகின்றனர். கொரோனா காலத்தில் வியாபாரியின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையர்கள் நூதன முறையில் திருட்டில் ஈடுபட்டது வியாபாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கள்ளச்சாவி போட்டு டூவீலர் திருட்டு - கொள்ளையரின் சிசிடிவி காட்சி வெளியீடு

சென்னையில் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனங்களை கொள்ளையர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

34 views

சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை கொல்ல முயற்சி - சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகள் தேடுதல் வேட்டை

சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை வெட்டிவிட்டு தப்பி சென்ற மூன்று பேரை அயனாவரம் போலீசார் தேடி வருகின்றனர்.

30 views

சென்னையில் 6 மண்டலங்களில் 1000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை

சென்னையில் 6 மண்டலங்களில் 1000க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

17 views

பிற செய்திகள்

கொரோனா பணி, தமிழகத்தில் 43 மருத்துவர்கள் உயிரிழப்பு - அதிர்ச்சி அளிப்பதாக ஸ்டாலின் டிவிட்டர் பதிவு

கொரோனா காலத்தில் தமிழகத்தில் பல மருத்துவர்கள் உயிரிழந்திருப்பதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

355 views

பழனி திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா

பழனி திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

8 views

புதிதாக 5,883 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 883 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

131 views

காமராஜர் பல்கலை. தொலைதூரக் கல்வி தேர்வில் முறைகேடு

விடைத்தாள் திருத்தும் போது தலா 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்குமாறு, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு துணை வேந்தர் பரிந்துரைத்துள்ளார்.

19 views

தஞ்சை அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா நிதியுதவி

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு, நடிகை ஜோதிகா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

243 views

ஊரடங்கால் ஏற்பட்ட வறுமையால் பறிபோன உயிர் - பூக்கடை வியாபாரி மன உளைச்சலால் தற்கொலை

ஊரடங்கால் போதிய வருமானமின்றி தவித்து வந்த பூக்கடை வியாபாரி ஒருவர் திருச்செந்தூரில் தற்கொலை செய்து கொண்டார்.

809 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.