இந்தியாவில் முதலீடு செய்ய முன்வருமாறு அமெரிக்க நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
பதிவு : ஜூலை 22, 2020, 09:50 PM
இந்தியா ஐடியாஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
இந்தியா ஐடியாஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இந்த மாநாட்டில் பங்கேற்றார். அமெரிக்கா இந்தியா வர்த்தக கவுன்சிலின் 45 ஆம் தொடக்க விழாவை முன்னிட்டு நடந்த இந்த நிகழ்ச்சியில், சிறந்த எதிர்காலத்தை கட்டமைத்தல் என்னும் தலைப்பில் பிரதமர் மோடி உரையாற்றினார். காணொலி காட்சி வழியாக பங்கேற்ற மோடி,  உலகிற்கு தற்போது சிறப்பான எதிர்காலம் தேவை, அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்  என்று கூறினார். கடந்த பல தசாப்தங்களாக யு.எஸ்.ஐ.பி.சி இந்தியா மற்றும் அமெரிக்க இடையிலான வணிக உறவை வலுப்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.  தொடர்ந்து பேசிய பிரதமர், உலகளாவிய பொருளாதாரம், செயல்திறம் மற்றும் தேர்வு முறை ஆகியவற்றில் இந்தியா அதிக கவனம் செலுத்தியுள்ளதாக கூறினார். இந்தியா மீதான நேர்மறை எண்ணங்கள் உலக அளவில் அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.   

இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் சீர்திருத்தமும், வெளிப்படைத்தன்மையுடன் பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். தொழில்வாய்ப்புள்ள நாடாக இந்தியா மாறி வருவதையும், கிராம‌ப்புறங்களில் இணையதள பயன்பாடுகள் நகர்ப்புறங்களை விட அதிகரித்துள்ளதையும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா என்பது ஏராளமான வாய்ப்புகளுக்கான நிலம் என கூறிய பிரதமர் தொடர்ந்து இந்தியாவில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார். இந்தியாவில் வேளான் துறையில் பல்வேறு தொழில் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாகவும், தொழில்நுட்பத்தில் 5ஜி, பிக் டேட்டா, அனலிட்டிக்ஸ், குவாண்டம் கம்யூட்டிங் ஆகியவற்றில் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளதாகவும் மாநாட்டில் அவர் தெரிவித்தார். தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கும் பிரதமர் அழைப்பு விடுத்தார். உள்கட்டமைப்பு , எரிசக்தி துறை, சுகாதாரத்துறையிலும் முதலீடு செய்ய இந்தியா அழைப்பதாக கூறிய பிரதமர் மோடி, இந்தியாவில் வீடுகள், நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் கட்டுவதில் இந்தியாவுடன் இணைந்து செயல்படவும் அழைப்பு விடுத்தார். 

போக்குவரத்து துறையை பற்றி பேசிய பிரதமர், தேசிய நெடுஞ்சாலைகள் உருவாக்கத்திலும், விமான நிலைய உள்கட்டமைப்பிலும் ஏராளமான வேலை வாய்ப்புகள் குவிந்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். மேலும் விமான போக்குவரத்து துறையில் முதலீடு செய்ய இதுவே மிகச்சிறந்த தருணம் என கூறிய பிரதமர், அடுத்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் விமான பயணிகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கும் என்று கூறினார். 10 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய விமானங்களை சேர்க்க தனியார் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 


இதேபோல பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறையிலும் முதலீடு செய்ய அழைப்பு விடுத்த பிரதமர், விண்வெளித்துறையில்  தனியார் முதலீட்டுக்கு ஊக்கமளித்து வருவதாக குறிப்பிட்டார். பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்வதற்கான அன்னிய நேரடி முதலீட்டை 74 சதவீதமாக உயர்த்துவதாகவும் பிரதமர் அறிவித்தார். காப்பீட்டு துறையில் 100 சதவீத அன்னிய முதலீட்டிற்கு தற்போது அனுமதி அளிப்பதாக கூறிய பிரதமர், காப்பீடு,வேளாண்மை, கல்வித் துறையில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதாக தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2980 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

1665 views

"சாமானிய மக்களுக்காக பாடுபட்டவர் ஜெயலலிதா" - அமைச்சர் சரோஜா தகவல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முதியவர்களுக்கான உதவித் தொகை மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

325 views

வேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு

டெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

254 views

பிற செய்திகள்

கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி - விரைவில் 2 -ஆம் கட்ட பரிசோதனை

கோவாக்ஸின் தடுப்பூசியின், இரண்டாம் கட்ட பரிசோதனை வரும் வாரங்களில் தொடங்கப்பட உள்ளது.

5 views

புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்குவோம் - மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

புதுச்சேரியில் ஆட்சி அமைத்திடும் சூழலை உருவாக்குவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

273 views

அனுமான் கடி கோயிலில் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் சாமி தரிசனம்

அயோத்தியில் உள்ள அனுமான் கடி கோயிலில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சாமி தரிசனம் செய்தார்.

11 views

"ஆன்லைன் பணப் பரிவர்த்தனையில் ரூ.2.90 லட்சம் கோடி" - தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

ஆன்லைன் பரிவர்த்தனைகளில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஜூலை மாதத்தில் 2 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

198 views

மோடி தலைமையில் ராம் ராஜ்யம் அமையும் என்ற நம்பிக்கை வந்துள்ளது - ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

பிரதமர் மோடி ஆட்சியின் கீழ், இந்தியாவில் ராம ராஜ்யம் அமையும் என்ற நம்பிக்கை தமக்கு வந்துள்ளதாக ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

6 views

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,972 பேருக்கு கொரோனா தொற்று.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52 ஆயிரத்து 972 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.