இருதரப்பினரிடையே நடந்த மோதல் விவகாரம்: எஸ்.ஐ., மற்றொரு காவலரிடம் நாளை விசாரணை என தகவல்
பதிவு : ஜூலை 22, 2020, 06:33 PM
புதுக்கோட்டை அருகே நடந்த மோதல் தொடர்பாக பொதுமக்களிடம் வருவாய் கோட்டாட்சியர் நடத்திய விசாரணை நிறைவடைந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி அருகே உள்ள போச்சம்பள்ளியில் முன்விரோதம் காரணமாக இரு பிரிவினரிடையே மோதல் வெடித்தது. அப்போது மோதலை கட்டுப்படுத்த எஸ்.ஐ. சரவணன், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டதன் பேரில் வருவாய் கோட்டாட்சியர் பால தண்டாயுதபாணி நியமிக்கப்பட்டார். இதையடுத்து விசாரணைக்காக சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற வருவாய் கோட்டாட்சியர், பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட காவல் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் மற்றொரு காவலருக்கு சம்மன் அனுப்பி நாளை விசாரிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மோதலில் ஈடுபட்ட இருபிரிவினருக்கும் இடையே தேர்தல் முன்விரோதம் மற்றும் மணல் அள்ளுவதில் பிரச்சினை இருந்து வந்ததாகவும் பொதுமக்கள் அவரிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.

1274 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

476 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

470 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

139 views

வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று

வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

34 views

பிற செய்திகள்

"சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் மத்திய அரசு கைவிட வேண்டும்" - பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்த​ல்

சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

52 views

"இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

இ-பாஸ் முறையில் தளர்வுகள் என்றும், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்கவே தான் வலியுறுத்தி வந்த தாக தெரிவித்துள்ளார்.

42 views

விநாயகர் சிலை வைக்க தமிழக அரசு தடை - தடையை மீறி இந்து முன்னணி சார்பில் சிலை பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக விநாயகர் சிலை வைக்க தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில், இந்து முன்னணி சார்பில் நெல்லை டவுணில், முதல் வினாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

78 views

சென்னை பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய இளங்கலை மற்றும் முதுகலை படிப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

70 views

"தமிழக அரசின் நிதி நிலைமை மோசமாகி விட்டது" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

தமிழக அரசின் நிதிநிலைமை வீழ்ச்சியடைந்து, மிகவும் மோசமாகி விட்டதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

41 views

தமிழகத்தில் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.