தன்னார்வல அமைப்பு சார்பில் 500 மரக்கன்றுகள்
பதிவு : ஜூலை 14, 2020, 09:13 AM
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த பனஞ்சேரி கிராமத்தில், தன்னார்வல அமைப்பு சார்பில் இலவச மரக்கன்று வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த பனஞ்சேரி கிராமத்தில், தன்னார்வல அமைப்பு சார்பில் இலவச மரக்கன்று வழங்கப்பட்டது. புவி வெப்ப மயமாதலை தடுக்கும் வகையில் அப்பகுதியில் 500 மரக்கன்று வழங்கப்பட்டது.  கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முகக்கவசம் மற்றும் கபசுரக்குடிநீரும் வழங்கப்பட்டது


முதல்வர் பெயரில் "எடப்பாடியார் நகர்" உதயம்


தமிழகத்தில் முதல் முறையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரில் புதிய நகர் உருவாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதிக்குட்பட்ட தோப்புப்பாளையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் அடங்கிய புதிய நகர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நகருக்கு "எடப்பாடியார் நகர்" என எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் பெயர் சூட்டி திறந்து வைத்தார். மாவட்ட எஸ்.பி.யாக ஜியாவுல் ஹக் பொறுப்பேற்பு


கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜெயச்சந்திரன் திருச்சி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, புதிய காவல் கண்காணிப்பாளராக ஜியாவுல் ஹக் பொறுப்பேற்று கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற ஜியாவுல் ஹக்கிற்கு மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட போலீசார் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுமக்கள் எந்த நேரத்திலும் தம்மை சந்தித்து புகார் கூறலாம் என்றும், உடனடியாக தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார். 500 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு


வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதியை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோட்டச்சேரி  சாத்கர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், 500 லிட்டர் கள்ளச்சாரயம் மற்றும் மூலப்பொருட்களை தீயிட்டு அழித்தனர். தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்


எஸ்.எம்.எஸ். மூலம் கொரோனா பரிசோதனை முடிவு


ராணிப்பேட்டை மாவட்டத்தில், கொரோனா பரிசோதனை முடிவுகள் இனி செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பாக கொரோனா தொற்று உறுதியானால், சுகாதாரத்துறை அதிகாரிகள், அவர்களின் வீடுகளுக்கு சென்று அழைத்து செல்வார்கள். தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில், இதுவரை 16 ஆயிரத்து 532 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது


மேலும் 80 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 400-ஐ தாண்டியது


வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், ஒரே நாளில் 80 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 400-ஐ தாண்டியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு, குடியாத்தம் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


தீயணைப்பு வீரர் உட்பட 5 பேருக்கு கொரோனா


பொள்ளாச்சியில் 5 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் உடுமலை தீயணைப்பு நிலையத்தில் புதிதாக பணிக்கு சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பணியாற்றிய பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அந்த பகுதி தனிமைபடுத்தப்பட்டது. 


தமிழக - கேரள எல்லை சோதனை சாவடியில் ஆய்வு


தேனி மாவட்டம் லோயர்கேம்பில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருத்துவ சோதனை சாவடியை தென்மண்டல ஐஜி முருகன் மற்றும் டிஐஜி முத்துச்சாமி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்டும் சோதனை குறித்து போலீசார் மற்றும் வருவாய் துறையினரிடம் அவர்கள் கேட்டறிந்தனர். இதையடுத்து பணியில் உள்ள குறைபாடுகளை கேட்டறிந்த அவர்கள், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

180 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

160 views

மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்

பெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

50 views

பிற செய்திகள்

இலங்கை தாதா உயிரிழந்த விவகாரம் - போலி ஆதார் எடுக்க பயன்படுத்திய ஆவணங்கள் சிக்கின

இலங்கை தாதா உயிரிழந்த விவகாரத்தில் போலி ஆதார் எடுக்க பயன்படுத்திய ஆவணங்கள் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரியின் வீட்டில் சிக்கின.

5 views

முதுகலை மருத்துவ தேர்வுகள் திடீரென அறிவிப்பு - வரும் 24ஆம் தேதி தேர்வு - அதிர்ச்சியில் மருத்துவர்கள்

முதுகலை மருத்துவ தேர்வுகள், திடீரென வரும் 24ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் முதுகலை மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

36 views

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு எதிரொலி - ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

8 views

காற்றில் பிய்த்து வீசப்பட்ட வீட்டின் கூரை - குழந்தைகளுடன் நிழற்குடையில் தஞ்சமடைந்த பெண்

உதகை எமரால்ட் பகுதியில், வீசிய சூறாவளிக் காற்றில் கூரை வீடுகள் பிய்த்து வீசப்பட்டன.

8 views

தொடர் உச்சத்தில் தங்கம் விலை - ஒரு சவரன் தங்கம் ரூ.43,360க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 368 ரூபாய் உயர்ந்தது.

8 views

கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று...

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.