காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை மாவட்டங்களில் கனமழை பெய்யும் - தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு
பதிவு : ஜூலை 14, 2020, 08:50 AM
சென்னையில் இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு
காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை, மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  வடதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இடியுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது

5வது நாளாக மழை - அதிகரிக்கும் குளிர்கொடைக்கான‌ல் ம‌லைப்ப‌குதியில் தொடர்ந்து 5வ‌து நாளாக‌ கனமழை பெய்த‌து. மூன்று ம‌ணிநேர‌த்திற்கும் மேலாக‌ இடியுட‌ன் கூடிய‌ மழையால் விவ‌சாயிக‌ள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்மழை காரணமாக கொடைக்கானலில் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை


நீலகிரி மாவட்டத்தின் நீர்பிடிப்பு பகுதிகளான அப்பர் பவானி, அவலாஞ்சி, நடுவட்டம், தேவாலா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையால் பல்வேறு அணைக்கட்டுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மலைப்பகுதியில் அடர்த்தியான மேக மூட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரம‌ம் அடைந்துள்ளனர். மழை காரணமாக நீலகிரியில் கடும் குளிர் நிலவுகிறது. 

பெரியகுளம் சுற்றுவட்டார பகுதியில் மழை


தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பரவலாக மழை பெய்த‌து. கும்பக்கரை, முருக மலை, வடுகப்பட்டி உள்ளிட்ட பகுதியில் 2 மணி நேரத்திற்கும் கனமழை பெய்த‌து. கடந்த சில நாட்களாக பெரியகுளம் பகுதியில் பெய்துவரும் மழையால் அப்பகுதி மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஒருமணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை


வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்த‌து. இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த மழையால், சாலைகளில் வெள்ளம்போல் தண்ணீர் ஓடியது. தொடர் மழையால் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

181 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

163 views

மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்

பெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

50 views

பிற செய்திகள்

இலங்கை தாதா உயிரிழந்த விவகாரம் - போலி ஆதார் எடுக்க பயன்படுத்திய ஆவணங்கள் சிக்கின

இலங்கை தாதா உயிரிழந்த விவகாரத்தில் போலி ஆதார் எடுக்க பயன்படுத்திய ஆவணங்கள் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரியின் வீட்டில் சிக்கின.

6 views

முதுகலை மருத்துவ தேர்வுகள் திடீரென அறிவிப்பு - வரும் 24ஆம் தேதி தேர்வு - அதிர்ச்சியில் மருத்துவர்கள்

முதுகலை மருத்துவ தேர்வுகள், திடீரென வரும் 24ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் முதுகலை மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

56 views

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு எதிரொலி - ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

15 views

காற்றில் பிய்த்து வீசப்பட்ட வீட்டின் கூரை - குழந்தைகளுடன் நிழற்குடையில் தஞ்சமடைந்த பெண்

உதகை எமரால்ட் பகுதியில், வீசிய சூறாவளிக் காற்றில் கூரை வீடுகள் பிய்த்து வீசப்பட்டன.

8 views

தொடர் உச்சத்தில் தங்கம் விலை - ஒரு சவரன் தங்கம் ரூ.43,360க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 368 ரூபாய் உயர்ந்தது.

11 views

கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று...

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று.

60 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.