தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளின்றி முழு ஊரடங்கு - தொடர்ந்து 2வது வாரமாக ஞாயிறன்று முழு ஊரடங்கு
பதிவு : ஜூலை 11, 2020, 02:56 PM
தமிழகம் முழுவதும், இரண்டாவது முறையாக நாளை தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், இம்மாதம் உள்ள அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் மாநிலம் முழுவதும், எந்த தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, முதல் ஞாயிறான கடந்த 5ஆம் தேதி மாநிலம் தழுவிய முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில், இம்மாதத்தின் இரண்டாவது ஞாயிறான நாளை, மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய தேவைகளான பால் கடைகள், மருந்தகங்கள் மட்டுமே நாளை இயங்கும். காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், உணவகங்கள் உட்பட அனைத்து கடைகளும் நாளை மூடப்பட்டிருக்கும். இதேபோல் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும் நாளை திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

181 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

167 views

மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்

பெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

50 views

பிற செய்திகள்

வேதா நிலையம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

1 views

டேங்கர் லாரிகளில் இருந்து பெட்ரோல், டீசல் திருட்டு - 9 பேரை கைது செய்து போலீசார் விசாரணை

புழல் அருகே டேங்கர் லாரிகளில் இருந்து எரிபொருளை திருடி அதை கலப்படம் செய்து வந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

0 views

தென் மாவட்டங்களில் தொழில் துவங்குவதற்கு முன்வரவேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி

தென் மாவட்டங்களில் தொழில் துவங்குவதற்கு முன்வரவேண்டும் என்பதே அரசின் விருப்பம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

4 views

இலங்கை தாதா உயிரிழந்த விவகாரம் - போலி ஆதார் எடுக்க பயன்படுத்திய ஆவணங்கள் சிக்கின

இலங்கை தாதா உயிரிழந்த விவகாரத்தில் போலி ஆதார் எடுக்க பயன்படுத்திய ஆவணங்கள் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரியின் வீட்டில் சிக்கின.

9 views

முதுகலை மருத்துவ தேர்வுகள் திடீரென அறிவிப்பு - வரும் 24ஆம் தேதி தேர்வு - அதிர்ச்சியில் மருத்துவர்கள்

முதுகலை மருத்துவ தேர்வுகள், திடீரென வரும் 24ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் முதுகலை மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

62 views

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு எதிரொலி - ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.