சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மேலும் 18 பேர் பலி
பதிவு : ஜூலை 09, 2020, 11:08 AM
சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனோ தொற்றுக்கு 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா - சென்னையில் மேலும் 18 பேர் பலி

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனோ தொற்றுக்கு 18 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 6 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 5 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தலா 3 பேரும் சென்னை ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, கடந்த 12 மணி நேரத்தில் 18 பேர் சென்னையில் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

மதுரையை மிரட்டும் கொரோனா பரவல் - ஒரே நாளில் 310 பேருக்கு தொற்று உறுதி

மதுரையில் இன்று ஒரே நாளில் மேலும் 310 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்து 367ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 86 ஆக உள்ளது. தற்போது வரை 3 ஆயிரத்து 811 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை வரை ஆயிரத்து 160 பேர் குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர். நாளுக்குநாள் அதிகரிக்கும் வைரஸ் பாதிப்பால், மதுரை மாநகர மக்கள் பீதி அடைந்துள்ளனர். 

நெல்லையில் ஒரே நாளில் 139 பேருக்கு கொரோனா

நெல்லை மாவட்டத்தில் கொரனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1439ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் 139 ஆக அதிகரித்துள்ள நிலையில், கடந்த 4 நாட்களில் மட்டும் 400 க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். அதிகபட்சமாக நெல்லை மாநகரப்பகுதியில் 69 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தற்போது 589 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 702 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.

1115 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

441 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

421 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

117 views

பிற செய்திகள்

நைஜீரியாவில் உயிரிழந்த தமிழக இளைஞர் - தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நைஜீரியாவில் உயிரிழந்த தமிழக இளைஞரின் உடலை சொந்த ஊர் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க கோரி குடும்பத்தினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

0 views

தங்கத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி மோசடி - போலி மந்திரவாதியை கைது

திண்டுக்கல் அருகே தங்கத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட போலி மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.

5 views

கந்துவட்டி கொடுமை - தம்பதி தீக்குளிக்க முயற்சி - ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு

தூத்துக்குடியில் கந்துவட்டி கொடுமை காரணமாக குறிசொல்லும் தம்பதியர் குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

71 views

நீட் தேர்வு முறைகேடு - மாணவர் உதித் சூர்யா தாக்கல் செய்த மனு - தேனி நீதிமன்றத்தில் உண்மை சான்றிதழ்களை ஒப்படைக்க உத்தரவு

நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித் சூர்யா தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார்.

17 views

இரும்பு கூண்டுக்குள் வைத்து பூட்டப்பட்ட எம்ஜிஆர் சிலை

புதுச்சேரி மாநிலத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் காவி துண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

80 views

இன்று சர்வதேச யானைகள் தினம் - வனம் காக்கும் யானையை காக்க கோரிக்கை

நிலத்தில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரிய விலங்கு... கூட்டம் கூட்டமாக வாழும் தன்மை கொண்டது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.