சாத்தான்குளம் சம்பவம் : இன்றே சிபிசிஐடி விசாரணையை தொடங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
பதிவு : ஜூன் 30, 2020, 01:46 PM
சாத்தான்குளம் சம்பவம் குறித்து நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் இன்றே விசாரணையை தொடங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
* சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. 

* அப்போது, தூத்துக்குடி ஏடிஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். 

* இருவரின் முதல் நிலை பிரேத பரிசோதனை அறிக்கை, நிதித்துறை நடுவரின் விசாரணை அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அதன்  அடிப்படையில் உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். 

* சாத்தான்குளம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தச் சென்ற மாஜிஸ்திரேட்டை காவல் உயர் அதிகாரிகள் மற்றும் காவலர் அவமதித்தது அதிர்ச்சி அளிக்கிறது என்றனர். 

*  இறந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் மோசமான காயங்கள் இருந்ததால், காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 

* நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்ட ஏடிஎஸ்பி குமார்,டிஎஸ்பி பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகிய மூவர் தரப்பிலும் தனித்தனியே வழக்கறிஞர்களை நியமித்து, 4 வாரத்தில் விளக்கமளிக்க  உத்தரவிட்டனர். 

* மேலும், இந்த வழக்கில் ஒரு நொடிக்கூட வீணாகமல் விசாரணை நடைபெற வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். 

* இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கும் முன் தடயங்களை அழிக்க வாய்ப்பு உள்ளதாக கூறிய நீதிபதிகள், 

* அதுவரை நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார், இந்த வழக்கின் விசாரணையை இன்றே தொடங்க உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2170 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

601 views

டிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்

இந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

357 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

156 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

95 views

பிற செய்திகள்

சென்னையில் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் - 11,120 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிப்பு

மருத்துவ முகாம் மூலம் மட்டும் 11 ஆயிரத்து 120 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

0 views

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 அறிவுரைகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சென்னை மாநகராட்சி பத்து அறிவுரைகளை வழங்கி உள்ளது.

125 views

அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா - தனியார் மருத்துவமனையில் அனுமதி

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

347 views

நேற்றிரவு முதல் இன்று காலை வரை சென்னையில் 22 பேர் உயிரிழப்பு

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 22 பேர் கொரோனோ உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

42 views

நீலகிரியில் ரூ.447 மதிப்பில் புதிய மருத்துவ கல்லூரி - காணொலி காட்சியில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்

நீலகிரி மாவட்டத்தில் 447 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மருத்துவ கல்லூரிக்கு காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

24 views

கொரோனாவில் இருந்து குணமடைந்த எஸ்.ஐ. - பணிக்கு திரும்பிய எஸ்.ஐ-க்கு உற்சாக வரவேற்பு

கொரோனாவில் இருந்து குணமடைந்து பணிக்கு திரும்பிய தாம்பரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமமூர்த்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

42 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.