நெசவாளர்களுக்கு இடையே மோதல் - படுகாயமடைந்த அமமுக நிர்வாகி மருத்துவமனையில் அனுமதி
பதிவு : ஜூன் 29, 2020, 04:23 PM
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் நள்ளிரவில் நெசவாளர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த அமமுக நிர்வாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருபுவனத்தில் அமமுகவின் அவைத் தலைவராக இருக்கும் ராமபத்ரன் என்பவர் திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்க உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் இவர் நெய்த பட்டில் குறை இருப்பதாக கூறி புடவை வாங்க சங்கத்தினர் மறுத்துள்ளனர். இதையடுத்து, அமமுக நகர செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சொன்னதன் பேரில் புடவை வாங்கப்பட்டுள்ளது. இதனைக் கேள்விப்பட்ட நெசவாளர் துக்காராம் சங்கத்தைப் பற்றியும் ராமபத்ரனை பற்றியும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.இதையடுத்து அவருக்கும் ராமபத்ரான் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. இதில் படுகாயமடைந்த அமமுக நிர்வாகி சரவணன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ராம்பத்ரன் மற்றும் துக்காராம் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

"சீனாவிடம் இந்திய நிலப்பகுதியை மோடி ஒப்படைத்துவிட்டார்" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சீன ஆக்கிரமிப்பிற்கு பயந்து இந்திய நிலப்பகுதியை சீனாவிடம் பிரதமர் மோடி ஒப்படைத்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

141 views

கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கியவர்கள் மீட்பு - 4 சிறப்பு விமானங்கள் மூலம் 559 பேர் மீட்பு

கொரோனா ஊரடங்கால் , ஓமன், குவைத், சூடான் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளில் சிக்கிய 100 மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்பட 559 பேர் 4 சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

104 views

சூர்யாபேட்டை பேருந்து நிலையம் அருகே - விரைவில் கர்னல் சந்தோஷ் பாபு உருவச் சிலை

இந்திய-சீன எல்லைப் போரில் வீர மரணம் அடைந்த கர்னல் சந்தோஷ் பாபு உருவச் சிலையை நிறுவ தெலுங்கானா அரசு திட்டமிட்டுள்ளது.

64 views

பிற செய்திகள்

"சாத்தான்குளம் சம்பவம்-குற்றவாளிகளுக்கு மரண தண்டனை" - பொன்.ராதாகிருஷ்ணன்

சாத்தான்குளம் சம்பவம் மற்றும் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

732 views

சென்னையில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை நெருங்குகிறது

சென்னையில் தொடர்ந்து 5வது நாளாக கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது .

22 views

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது

தமிழகத்தில் 2வது நாளாக கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது. இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 329 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

17 views

என்எல்சி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

கடலூர் மாவட்டம் என்எல்சி நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

22 views

போர்வீரர்கள் மத்தியில் திருக்குறள் விளக்கம் - பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து நன்றி

இந்திய- சீன எல்லையில், லடாக்கில் ராணுவ வீரர்களிடம் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியதற்கு பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார்.

875 views

"காவல்துறையையும், தமிழக அரசையும் திமுக தலைவர் ஸ்டாலின் தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சாத்தான்குளம் விவகாரத்தில் அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் தரம் தாழ்ந்து விமர்சிப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

271 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.