உயிர் பிரியும் தரூணத்தில் தந்தைக்கு செல்பி அனுப்பிய மகன் - செயற்கை சுவாசத்திற்காக 3 மணி நேரம் போராடியதாக தகவல்
பதிவு : ஜூன் 29, 2020, 02:27 PM
கொரோனா பாதித்த 26 வயது இளைஞர் உயிரிழக்கும் முன்பு, தனது தந்தைக்கு அனுப்பிய உருக்கமான வீடியோ தெலங்கானாவை உலுக்கி வருகிறது.
தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தின் புறநகர் பகுதியான ஜவஹர்நகர் பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞருக்கு திடீரென கடந்த 24 ஆம் தேதி காய்ச்சல் அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞர் இறுதியாக அரசு நெஞ்சக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஒருகட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிர் பிரியும் முன்பு தந்தைக்கு அனுப்பிய சில வினாடிகள் நீடிக்கும் செல்பியில் தனக்கு அளிக்கப்பட்ட செயற்கை சுவாசத்தை நிறுத்தி விட்டதாகவும் 3 மணி நேரமாக தொடர்ந்து கெஞ்சியும் தனக்கு மருத்துவர்கள் செயற்கை சுவாசம் அளிக்க மறுத்துவிட்டதாகவும் அதனால் சுவாசிக்க முடியவில்லை அப்பா, Bye daddy. Bye all, bye daddy என தெரிவித்துள்ளார். தனது இருதயம் நின்று விட்டதாகவும் நுரையீரல் மட்டுமே இயங்கவதாகவும் தெரிவித்து  அந்த இளைஞர் அனுப்பிய செல்பி நேற்று காலை தான் தெரியவந்துள்ளது. இது தற்போது வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் ஏரகாடா அரசு நெஞ்சக மருத்துவமனை டீன் மகபூப் கான் உயிரிழந்த இளைஞரின்  குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இளைஞருக்கு செயற்கை சுவாசம் தொடர்ந்து தரப்பட்ட நிலையில் அவரால் அதனை உணர முடியதாத அளவுக்கு தொற்றின் தாக்கம் இருந்துள்ளதாக மருத்துவர் கான் தெரிவித்துள்ளார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பான் தான் அவர் உயிரிழந்ததாகவும் டீன் மகபூப் கான் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ஏழரை - (14.04.2020)

ஏழரை - (14.04.2020) - Lockdown பண்ணது ஓகேதா.. ஆனா நிவாரணம் தரலயே?

247 views

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன?

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன? - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்

213 views

ஊக்க மருந்து புகார் - தமிழக வீராங்கனை கோமதிக்கு 4 ஆண்டுகள் தடை

ஊக்க மருந்து புகாரில் சிக்கிய தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

111 views

பரோட்டாவுக்கு ஆசைப்பட்டு போலீஸ் வேஷம் போட்டவர் கைது

சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டு போலீஸ் வேஷம் போட்டு சிக்கியவரின் கதையை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

84 views

(22.04.2020) ஏழரை

(22.04.2020) ஏழரை

73 views

பிற செய்திகள்

விமான சேவை சார்ந்த 30 லட்சம் பேர் வேலை இழப்பு - ஆசிய அளவில் விமான துறையில் ரூ.2.20 லட்சம் கோடி இழப்பு

இந்திய விமான துறையை சார்ந்திருக்கும் 30 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

75 views

பசுமை ரயில்வே என்ற இலக்கை நோக்கி செல்லும் ரயில்வே துறை : 200 மெகாவாட் திறனுள்ள காற்றாலைகளை நிறுவ ரயில்வே துறை திட்டம்

அடுத்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு, கர்நாடகா,குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், 200 மெகாவாட் திறனுள்ள காற்றாலைகளை நிறுவ ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

8 views

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் : அமைச்சர், அரசு மருத்துவமனை அதிகாரிகளுடன் பேச்சு

ஆந்திர மாநிலம் நெல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

10 views

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் : அதிகாரிகளுடன் கர்நாடக முதலமைச்சர் ஆலோசனை

தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடையத் தொடங்கி உள்ள நிலையில், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா இன்று அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

7 views

"டெல்லியில் 2-வது பிளாஸ்மா வங்கி தொடங்கப்படும்" : துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தகவல்

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் வகையில் டெல்லியில் 2-வது பிளாஸ்மா வங்கி தொடங்க உள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

14 views

"வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மருந்து தொகுப்பு" : ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி

கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு, தேவையான அனைத்து மருந்து மாத்திரைகளுடன் கூடிய தொகுப்பை இலவசமாக வழங்க ஆந்திர மாநில அரசு முடிவு எடுத்துள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.