கொரோனா தொற்று பரவல் : கணித மாதிரிகள் சரியாக கணிக்கத் தவறி விட்டன - ஐ.சி.எம்.ஆர்.
பதிவு : ஜூன் 29, 2020, 02:20 PM
கொரோனா தொற்று பரவலை கணித மாதிரிகள் சரியாக கணிக்கத் தவறிவிட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது
சில கணித மா​திரிகள் கொரோனா பரவல் ஜூலையில் உச்சத்தை அடையும் என்றும், சில ஜூனில் முடிந்துவிடும் என்றும், இன்னும் சில கணிப்புகள் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துவிட்டதாக தெரிவித்த நிலையில் தற்போது சோதனையின் மூலம் கிடைக்கும் தரவுகள் அவை எல்லாம் தவறு என சுட்டிக்காட்டுவதாக ஐ.சி.எம்.ஆர். தலைவர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் கொரோனா தொற்றை கண்டறிதல், தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் ஆகியவற்றின் மூலமாக மட்டுமே இதனை தடுப்பது சாத்தியம் என்ற நிலையில்,  சோதனையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஐ.சி.எம்.ஆர், தினசரி சோதனை நடத்தும் அளவை 2 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகளாக உயர்த்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் எண்ணிக்கை 2 லட்சத்து 31 ஆயிரத்து 95 ஆக அதிகரித்து உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இதுவரை  82 லட்சத்து 27 ஆயிரத்து 802 ரத்த மாதிரிகள் சோதி​க்கப்பட்டு உள்ளதாகவும் பார்கவா தெரிவித்துள்ளார். 

கொரோனா தொற்றை கண்டறிய  மட்டும் நாட்டில் ஆயிரத்து 36 ஆய்வகங்கள் பிரத்யேகமாக செயல்பட்டு வருவதாகவும் பார்கவா தெரிவித்துள்ளார். மருந்து அல்லது தடுப்பூசி உருவாக்கப்படும் வரை, சமூக விலகல், முக கவசம், கை கழுவுதல் போன்ற சுகாதார நடைமுறைகளே தற்போது நம்முன் உள்ள ஒரே தீர்வு என்றும் ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ஜூலை 10-ல் உண்ணாவிரத போராட்டம் - தனியார் பள்ளிகள் சங்கம் அறிவிப்பு

தமிழகத்தில் ஆசிரியா்கள், ஊழியா்கள், நிா்வாகிகள் சாா்பில் ஜூலை 10-ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.

836 views

ஏழரை - (14.04.2020)

ஏழரை - (14.04.2020) - Lockdown பண்ணது ஓகேதா.. ஆனா நிவாரணம் தரலயே?

224 views

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன?

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன? - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்

180 views

7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை - பல்வேறு கட்சியினர், அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த பூ வியாபாரி ராஜா என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

16 views

பிற செய்திகள்

சீனாவை குறிப்பிட்டு பேச தயங்குவது ஏன் ? - ப .சிதம்பரம் கேள்வி

பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் எந்த கூட்டத்திலும் சீனாவின் பெயரை குறிப்பிடாதது ஏன் என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

34 views

"ரயில்வே தனியார் வசம் போனால் அதிக கட்டணம்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை

ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், தனியார் மயமாக்குவதால் மக்களுக்கு எந்த பயனும் கிடையாது என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

12 views

சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை - ஜூலை 31 வரை நீட்டிப்பு

சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

45 views

"சீனாவில் இருந்து மின்சார உதிரிபாகங்கள் இறக்குமதி இல்லை" - மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் திட்டவட்டம்

சீனாவில் இருந்து மின்துறை உதிரிபாகங்களை இறக்குமதி செய்யும் திட்டம் இல்லை என மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்தார்.

39 views

போர்வீரர்கள் மத்தியில் திருக்குறள் விளக்கம் - பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து நன்றி

இந்திய- சீன எல்லையில், லடாக்கில் ராணுவ வீரர்களிடம் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியதற்கு பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார்.

856 views

ஊரடங்கில் அதிக வளர்ச்சி டாப்100 நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ்

கொரோனா தொற்று காரணமாக பொருளாதாரம் தேக்கமடைந்துள்ள நிலையில், அதிக வளர்ச்சி கண்ட 100 நிறுவனங்களில் இந்தியாவில் இருந்து ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இடம்பிடித்துள்ளது.

80 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.