திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட் இன்று வெளியீடு
பதிவு : ஜூன் 29, 2020, 02:13 PM
ஜூலை மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் இன்று வெளியிடப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் எட்டாம் தேதி முதல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் தினமும் 6 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 9 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் நாளொன்றுக்கு 1000 விஐபி தரிசன டிக்கெட்டுகள் வரை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஜூலை மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் தேவஸ்தனம் இன்று வெளியிடுகிறது. அதேபோல் ஜூலை 1ஆம் தேதிக்கான இலவச தரிசன டிக்கெட் நாளை முதல் திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம், அலிபிரி, விஷ்ணு நிவாசம் ஆகிய இடங்களில்  வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. நாளொன்றுக்கு 9 ஆயிரம் சிறப்பு தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வரும் நிலையில், இலவச தரிசன டிக்கெட் 6 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டு வருவது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்

பா.ஜ.க.வில் சேரும் திட்டம் இல்லை - சச்சின் பைல​ட்

பா.ஜ.க.வில் சேரும் திட்டம் இல்லை என்றும், அவ்வாறு சில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வேண்டும் என்றே புரளியை பரப்பி வருவதாகவும் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

53 views

"சச்சின் பைலட்டுக்கு பொறுமை இல்லை" - காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றச்சாட்டு

சச்சின் பைலட்டை காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக, மத்திய அமைச்சராக, மாநில காங்கிரஸ் தலைவராக, துணை முதலமைச்சராக நியமித்துள்ளது என்றும், அவருக்கு வயது என்ன எனவும், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சி​ங் கேள்வி எழுப்பி உள்ளார்.

18 views

"உங்களை வேறுபடுத்திக் காட்டுவது திறன் மட்டுமே" - இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி யோசனை

திறன் ஒன்று தான் உங்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும் என இளைஞர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி யோசனை தெரிவித்துள்ளார்.

18 views

சி.பி.எஸ்.இ.10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு - தேர்ச்சி விகிதத்தில் வழக்கம் போல மாணவிகள் முன்னிலை

சி.பி.எஸ்.இ.10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை Cbse results.nic.in என்கிற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும், மாணவர்களின் செல்போன்களுக்கு அவர்களின் முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் வாரியம் தெரிவித்துள்ளது.

30 views

யாரும் கவனிக்காததால் விரக்தி - வீடு திரும்பிய கொரோனா நோயாளி

தன்னை யாரும் கவனிக்காததால் கொரோனா தொற்று உள்ளவர், வீதியில் நடந்து வீட்டுக்குச் சென்ற சம்பவம் தெலுங்கானாவில் அரங்கேறியது.

580 views

வர்த்தகம், முதலீடு தொடர்பாக இந்தியா, ஐரோப்பிய கூட்டமைப்பு இன்று பேச்சுவார்த்தை - காணொலி மூலம் பிரதமர் மோடி பங்கேற்பு

ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் இந்தியா இடையே இன்று காணொலி மூலம் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.