மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை : ஊரடங்கு நீட்டிப்பா? - இன்று முக்கிய முடிவு
பதிவு : ஜூன் 29, 2020, 11:24 AM
தமிழகத்தில் 5ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடையும் நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24 முதல் ஊரடங்க அம​லில் உள்ளது. இந்நிலையில்,  தளர்வுகளுடன் கூடிய 5-ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ளது.  தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும், சென்னை, மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் தொற்று மற்றும் உயிரிழப்பு அதிகரித்துள்ளதால் அந்த மாவட்டங்களில் முழு ஊரடங்கும் அமலில் உள்ளது.  இந்நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார்.  இதில்  கொரோனா வைரஸ் பரவல் நிலைமை குறித்து முதலமைச்சரிடம்  மருத்துவக் குழுவினர் விரிவாக எடுத்துரைக்கின்றனர். மேலும் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கடலூர் உள்ளிட்டட மாவட்டங்களில் கொரோனா  அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எந்தெந்த மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தலாம் என்பது குறித்த பரிந்துரைகளும் முதலமைச்சரிடம் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த ஆலோசனைக்கு பிறகு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய மாவட்டங்கள் மற்றும் தளர்வுகளுடன் நீட்டிக்க வேண்டிய மாவட்டங்கள் குறித்த முக்கிய முடிவுகள் இன்றே அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

589 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

154 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

87 views

பிற செய்திகள்

கொரோனா பணியில் ஈடுபட்ட காவலர்கள், மீண்டும் தங்களது சிறப்பு பிரிவு பணிக்கு செல்ல வேண்டும் - தமிழக டிஜிபி உத்தரவு

காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி உத்தரவு கொரோனா கட்டுப்படுத்தும் பணிக்கு தமிழகம் முழுவதும் ஈடுபடுத்தப்பட்ட காவலர்களை, அவர்கள் வேலை பார்க்கும் சிறப்பு பிரிவில் மீண்டும் பணியை தொடர தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்

249 views

கொரோனா காலத்திலும் தொடரும் போதைப்பொருள் கடத்தல் - பார்சலில் ரூ.16 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்

சென்னையில் ஊரடங்கு காலத்திலும் விமானத்தில் வரும் பார்சல்களில் தொடர்ந்து போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன.

8 views

கடலூர்: போலி வங்கி துவங்க திட்டம் - 3 பேர் கைது

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் போலி வங்கி துவங்க திட்டம் தீட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

12 views

போலீசாருக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி - காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீசார் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு, எஸ்.பி. அலுவலகத்தில் திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது

13 views

மனைவியை பார்க்க அனுமதிக்காததால் ஆத்திரம் - விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் தற்கொலை முயற்சி

ஒசூர் அருகே விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டவர் காவல் நிலையத்திலேயே, கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

79 views

சாத்தான்குளம் விவகாரம் - வரும் 28-ம் தேதி அடுத்த விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை

சாத்தான்குளம் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி மற்றும் சிபிஐ இரண்டு தரப்பிலும் அடுத்த விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.