சாத்தான்குளம் சம்பவம் : சிபிஐ விசாரணை - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
பதிவு : ஜூன் 29, 2020, 11:13 AM
முன்பே மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தால், சாத்தான்குளம் தந்தை, மகனை காப்பாற்றி இருக்கலாம் என சிகிச்சை அளித்த மருத்துவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்.
சாத்தான்குளத்தில் வியாபாரிகள் உயிரிழந்த வழக்கை, சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க உள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.  பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் போலீசார் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார். தேவை என்றால் வழக்கு தொடர்ந்து அதனை எதிர்கொள்ள வேண்டும் என்றும், வியாபாரிகள் உள்ளிட்டோரை காவல்துறையினர் துன்புறுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டதாக முதலமைச்சர் தெரிவித்தார். 

"சாட்சியம் அளிக்க பலர் தயாராக உள்ளோம்" - உயிரிழந்த ஜெயராஜின் மகள் பேட்டி

இது தொடர்பாக உயிரிழந்த பென்னிக்சின் சகோதரியான பெர்சி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வரும் செவ்வாய் கிழமை , உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவிக்கும் கருத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாக கூறிய அவர், சாட்சியம் அளிக்க பலர் தயாராக இருப்பதாக தெரிவித்தார். 

"மருத்துவமனைக்கு வரும்போது பின்புறத்தில் காயங்கள் இருந்தன" - சிகிச்சை அளித்த மருத்துவர் தகவல் 

சிறையில் இருந்து காயங்களுடன் வந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை மருத்துவமனைக்கு முன்பே அழைத்து வந்திருந்தால் பிழைத்திருப்பார்கள் என அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார். மருத்துவமனைக்கு இருவரும் அழைத்து வரப்படும் போது அவர்களின் பின்புறத்தில் காயங்கள் இருந்ததாகவும், மோசமான நிலையில் வந்த பென்னிக்ஸ் 8 மணிக்கு வந்து 9 மணிக்கே உயிரிழந்து விட்டதாக கூறினார். ஜெயராஜ் நன்றாக தான் இருந்தார் என்றும், அவரின் புகைப்படங்கள் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது தான் என்பதை உறுதிபடுத்தியுள்ளார். ஜெயராஜூக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்டவை அதிகமாக இருந்ததாகவும், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தொடர்ந்து மருத்துவர்கள் ஜெயராஜை கண்காணித்து வந்த போதிலும், திடீரென அவர் இறந்து விட்டதாக நீதிபதி விசாரணையில் டாக்டர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2339 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1188 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

290 views

ஸ்வப்னா, சந்தீப் நாயருக்கு 8 நாள் என்ஐஏ காவல் - சிறப்பு நீதிமன்றம் அனுமதி

கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை 8 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

100 views

பிற செய்திகள்

மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா தொற்று உறுதி

கோவை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

24 views

போயஸ் தோட்டத்தை நினைவு இல்லமாக்கும் முடிவு - எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி

போயஸ்தோட்ட இல்லம் தொடர்பாக நீதிமன்றம் தெரிவித்த உத்தரவை அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

13 views

"10 நாளில் கொரோனாவை குறைக்க நடவடிக்கை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி

தமிழகம் முழுவதும் 10 நாட்களில் கொரோனாவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, கிருஷ்ணகிரியில் ஆய்வு பணியில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

254 views

கொரோனா சமூக பரவலா? : "ஆய்வு குழு தேவை" - எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

கொரோனா சமூகப் பரவல் குறித்து முறைப்படி ஆய்வு மேற்கொள்ளத் தனியாக ஒரு வல்லுநர் குழுவை நியமிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திமுகதலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்

24 views

முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நடவடிக்கை

கொரோனாவின் தீவிர தன்மையை குறைக்க சோதனை அடிப்படையில் முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து செலுத்த அனுமதி வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

58 views

சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் பெரியார் சிந்தனைகள் நீக்கம் - மத்திய பா.ஜ.க. அரசுக்கு வைகோ கண்டனம்

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பெரியார் சிந்தனைகள் நீக்கப்பட்டதற்கு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.