ஊரடங்கு தளர்ந்தாலும் மக்கள் வருகை இல்லை - வணிக வளாகங்கள், ஓட்டல் வர்த்தகர்கள் கவலை
பதிவு : ஜூன் 28, 2020, 08:07 PM
இந்தியா முழுவதும் பல மாநிலங்களில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோதிலும், வணிக வளாகங்கள், ஓட்டல்களில் மக்கள் வரத்து குறைந்துள்ளதால், வர்த்தகர்கள் பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளனர்.
கடந்த 100 நாட்களாக, ஊரடங்கு நீடித்து வரும் நிலையில், இம்மாதத் தொடக்கத்தில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வணிக வளாகங்களும், ஓட்டல்களும் திறக்க அனுமதிக்கப்பட்டன.

* ஆனால் , தொற்று அச்சம் காரணமாக மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்த்து வருவதால், வணிக வளாகங்கள், ஓட்டல்களில் மக்கள் வரத்து இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. 

* இந்தியாவின் மும்பை, டெல்லி, புனே, பெங்களூரு உள்ளிட்ட எட்டு முன்னணி நகரங்களில் மொத்தம் 126 வணிக வளாகங்கள் இருக்கின்றன. 

* இந்த வணிக வளாகங்கள் அனைத்தும் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக பெரும் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன.

* வேலைக்குச் செல்வோர் மட்டுமே வீட்டை விட்டு வெளியே சென்று வரும் நிலையில், பொழுதுபோக்கு மனநிலைக்கு மக்கள் திரும்பவில்லை என்றே சொல்லப்படுகிறது.

* பெரிய உணவகங்கள் திறக்கப்பட்டாலும், மக்கள் வருவது குறைவாகவே இருக்கிறது. 

* வணிக வளாகங்களில் செயல்படும், சில்லறை விற்பனை மையங்கள் திறக்கப்பட்டிருந்தாலும் வாடிக்கையாளர் வருகை 20 சதவீதம் என்கிற அளவில் உள்ளதாக கூறப்படுகிறது.

* இந்த ஆண்டு இறுதி வரை இந்த நிலை நீடிக்கும் என்பதால்,  நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை கால  விற்பனை கடுமையாக பாதிக்கப்படும் என வர்த்தகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ரஷ்யாவில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த கொரோனா தடுப்பூ​சி - மாஸ்கோ மாநகர மேயர் செர்ஜி சோபியானின் தகவல்

ரஷ்யாவின் முதல் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் V, பொது மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

1267 views

கொரோனா மீட்பு எண்ணிக்கை- அமெரிக்காவை முந்தியது இந்தியா

இந்தியாவில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 42 லட்சத்தை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

732 views

கேரளாவில் கொரோனாவுக்கு 1 லட்சத்து 35,117 பேர் பாதிப்பு - முதல்முறையாக மருத்துவர் பலி

கேரளாவில் முதன்முறையாக கொரோனாவுக்கு மருத்துவர் ஒருவர் பலியாகி உள்ளார்.

118 views

(17/08/2020) ஆயுத எழுத்து - இ - பாஸ் தளர்வு, டாஸ்மாக் திறப்பு : அவசியமா? அவசரமா?

(17/08/2020) ஆயுத எழுத்து - இ - பாஸ் தளர்வு, டாஸ்மாக் திறப்பு : அவசியமா? அவசரமா? - சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி, அதிமுக // மனுஷ்யபுத்ரன், திமுக // கஸ்தூரி, நடிகை // சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர்

88 views

பிற செய்திகள்

பிரதமருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்

மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று, பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

9 views

4 ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு பிரதமர் பயணம்: பிரதமரின் பயணச் செலவு ரூ.517.82 கோடி - மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை தகவல்

58 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் செய்ய 2015 முதல்2019 நவம்பர் வரை 517 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு உள்ளது.

8 views

"வாரா கடன்களை நிர்வாகம் செய்ய தனி வங்கி உருவாக்க வேண்டும்" - ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் தகவல்

தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

100 views

கல்லூரி, பல்கலைக் கழகங்களில் முதலாமாண்டு வகுப்பு: நவம்பர் 1 முதல் தொடங்கலாம் - மத்திய அரசு

கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் முதலாண்டு வகுப்புகளை தொடங்க ஏதுவாக கால அட்டவணையை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார்.

536 views

ஸ்வப்னா சுரேஷூக்கு 4 நாட்கள் என்ஐஏ காவல்

கேரள தங்க கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷூக்கு 4 நாட்கள் என்ஐஏ காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8 views

இந்திய கலாசார மற்றும் பரிணாம வளர்ச்சி ஆய்வுக்குழு: "தென்னிந்தியர்களுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்" - திமுக எம்.பி. திருச்சி சிவா கோரிக்கை

இந்திய கலாசாரம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்த ஆய்வுக்குழுவில் தென்னிந்தியர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்று திமுக எம்.பி. திருச்சி சிவா மாநிலங்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.