இ- பாஸ் மோசடியில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரி - ரூ.2000க்கு இ- பாஸ் விற்பனை செய்தது அம்பலம்
பதிவு : ஜூன் 28, 2020, 06:03 PM
இ-பாஸ் மோசடியில் கைதான சென்னை மாநகராட்சி அதிகாரி, வொர்க் ப்ரம் ஹோமில் இருந்தவர்களை வைத்து பெரிய அளவில் திட்டமிட்டு வேலை பார்த்து மோசடியில் ஈடுபட்டிருப்பது மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
ஊரடங்கு நேரத்தில் மக்கள் அவசர தேவைக்காக வெளியூர் செல்வதற்காக தமிழக அரசு இ-பாஸ் வழங்கி வருகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தகவல் வெளியான நிலையில் சென்னை மாநகராட்சி இ-பாஸ் அதிகாரி குமரன், மாவட்ட ஆட்சியர் அலுவலக இளநிலை உதவியாளர் உதயகுமார், கார் ஓட்டுநர்கள் 3 பேர் என மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சூழலில் முக்கிய குற்றவாளியான குமரன், ஒரு இ-பாஸுக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் வசூலித்ததாகவும், இதுவரை 100க்கும் மேற்பட்ட போலி பாஸ்களை கார் ஓட்டுநர்களின் உதவியோடு தயாரித்து விற்றதும் தெரியவந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ளவர்களை வொர்க் ப்ரம் ஹோமில் வைத்து இந்த போலி பாஸ் தயாரிப்பு பணியில் ஈடுபடுத்தியதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் கோவையை சேர்ந்த அரசு அதிகாரி ஒருவரும் உடந்தையாக இருந்தார் என்ற தகவல் வெளியானதோடு, மோசடியில் உடந்தையாக இருந்த சில கால்டாக்சி டிரைவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

திருச்சி : சைக்கிளில் ஆய்வு செய்த டிஐஜி திடீர் ஆய்வால் பரபரப்பு

திருச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கு உள்ள நிலையில் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா சைக்கிளில் சென்று திடீர் ஆய்வு நடத்தினார்.

2126 views

ஏழரை - (14.04.2020)

ஏழரை - (14.04.2020) - Lockdown பண்ணது ஓகேதா.. ஆனா நிவாரணம் தரலயே?

231 views

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன?

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன? - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்

197 views

ஊக்க மருந்து புகார் - தமிழக வீராங்கனை கோமதிக்கு 4 ஆண்டுகள் தடை

ஊக்க மருந்து புகாரில் சிக்கிய தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

91 views

(22.04.2020) ஏழரை

(22.04.2020) ஏழரை

72 views

புதுச்சேரியில் மேலும் 80 பேருக்கு கொரோனா - ஒருவர் பலி

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

37 views

பிற செய்திகள்

"கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டுத் தர வேண்டும்" - அடகு கடை முன் அழுது ஆர்ப்பாட்டம் செய்த மக்கள்

மதுரையில் அடகு கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டு தரக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

20 views

முழு ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட விசைத்தறி கூடங்கள் - தலா ரூ.1000 அபராதம் விதித்த நகராட்சி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் இயக்கி வந்த விசைத்தறி கூடங்களின் சாவிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

10 views

காலை 6 முதல் மாலை 6 வரை கடைகள் செயல்பட அனுமதி - வணிகர் சங்க கோரிக்கையை ஏற்ற மாவட்ட ஆட்சியர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் கடைகள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகள் செயல்படும் நேரத்தை மதியம் 2 மணியாக குறைத்து ஆட்சியர் அறிவித்திருந்தார்.

33 views

கட்டுமான பொருட்கள் 30 சதவீதம் விலை உயர்வு - மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் கட்டுமான பொருட்கள் விலை உயர்வு காரணமாக கட்டுமான தொழில்கள் முடங்கி உள்ளன.

5 views

20 சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பு - கொரோனா பரவலை கட்டுப்படுத்த போலீஸ் தீவிரம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாநகர் பகுதியில் 20 சோதனை சாவடிகளை அமைத்து தீவிர சோதனை நடைபெறுகிறது.

59 views

கொரோனா பாதிப்பு : "தமிழகத்தில் இறப்பு சதவீதம் குறைவு" - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தகவல்

கொரானா தொற்று பாதிப்பை பொருத்தவரை தமிழகத்தில் இறப்பு சதவீதம் மிக குறைவாக உள்ளதாக அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.