ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை மருத்துவமனைக்கு முன்பே அழைத்து வந்திருந்தால் பிழைத்திருப்பார்கள் - மருத்துவர் பாலசுப்ரமணியன்
பதிவு : ஜூன் 28, 2020, 05:36 PM
மாற்றம் : ஜூன் 28, 2020, 05:39 PM
சிறையில் இருந்து காயங்களுடன் வந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை மருத்துவமனைக்கு முன்பே அழைத்து வந்திருந்தால் பிழைத்திருப்பார்கள் என அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்
மருத்துவமனைக்கு இருவரும் அழைத்து வரப்படும் போது அவர்களின் பின்புறத்தில் காயங்கள் இருந்ததாக சிகிச்சை அளித்த டாக்டர் பாலசுப்ரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். 

* மருத்துவனையில் வழங்கப்படும் சிகிச்சை முறைக்கும், சிறைச்சாலையில் வழங்கப்படும் சிகிச்சை முறைக்கும் வித்தியாசம் உள்ளது என கூறியிருக்கும் அவர், சிறையில் முதலுதவி மட்டுமே வழங்க முடியும் என்றும், மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க முடியும் என விளக்கியுள்ளார். 

* மோசமான நிலையில் பென்னிக்ஸ் வந்ததாக கூறும் மருத்துவர், 8 மணிக்கு வந்த அவர் 9 மணிக்கு உயிரிழந்து விட்டதாக கூறியிருக்கிறார். 

* ஆனால் ஜெயராஜ் நன்றாக தான் இருந்தார் என்றும், அவரின் புகைப்படங்கள் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது தான் என்பதை உறுதிபடுத்தியுள்ளார். 

* ஜெயராஜூக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்டவை அதிகமாக இருந்ததாகவும், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் டாக்டர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார். 

* சிறையில் இருந்து காயங்களுடன் வந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை மருத்துவமனைக்கு முன்பே அழைத்து வந்திருந்தால் பிழைத்திருப்பார்கள் என்றும் தொடர்ந்து மருத்துவர்கள் ஜெயராஜை கண்காணித்து வந்த போதிலும், திடீரென அவர் இறந்து விட்டதாக நீதிபதி விசாரணையில் டாக்டர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

பிற செய்திகள்

நாகர்கோவில் பாலியல் வழக்கில் கைதான தினேஷ்க்கு ஜாமீன் - மதுரை உயர்நீதிமன்றம்

பரபரப்பாக பேசப்பட்ட நாகர்கோவில் பாலியல் வழக்கில் கைதான காசியின் நண்பன் தினேஷ்க்கு மதுரை உயர்நீதி மன்ற கிளை ஜாமீன் வழங்கியுள்ளது.

5 views

கொலை வழக்கில் யுவராஜூக்கு ஜாமீன் மறுத்த உச்ச நீதிமன்றம்

கோகுல்ராஜ் கொலை வழக்கில், சிறையில் இருக்கும் யுவராஜூக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

8 views

கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 2 பேர் மரணம் - "விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன்

திருப்பூரில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் மின் துண்டிப்பால் உயிரிழந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

13 views

நம்பிக்கை வாக்கெடுப்பு ரத்தாகுமா? - நவம்பர் 10 ஆம் தேதி இறுதி விசாரணை

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

421 views

சுவற்றில் விளம்பரம் எழுவதில் திமுக - பாஜக இடையே மோதல்

சுவற்றில் விளம்பரம் செய்வது தொடர்பாக சென்னையில் நேற்று திமுக- பாஜக இடையே நடந்த மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தேர்தலுக்கு முன்பாகவே சுவற்றுக்காக அரசியல் கட்சிகளின் இந்த போட்டி தொடங்கியிருப்பதை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

10 views

அரசு உத்தரவை மதிக்காத தனியார் பள்ளிகள் - முழுவீச்சில் நடைபெறும் ஆன்லைன் வகுப்புகள்

5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்க தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு தொடர்ந்து வகுப்புகளை நடத்தி வருவது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.