பேப்பரில் ரயில் தயாரித்த சிறுவன்- ரயில்வே அமைச்சகம் பாராட்டு
பதிவு : ஜூன் 26, 2020, 06:21 PM
செய்தித்தாள்களை கொண்டு நீராவி எஞ்சின் மூலம் இயங்கும் ரயில் வண்டியின் மாதிரியை தயாரித்த கேரள சிறுவனுக்கு ரயில்வே அமைச்சகம் பாராட்டு தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன், அத்வைத் கிருஷ்ணா ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். ரயில்களின் மீது ஆர்வம் கொண்ட கிருஷ்ணா ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் கழிக்க விரும்பி செய்தித் தாள்களை மட்டும் கொண்டு நீராவி ரயில் வண்டியின் மாதிரியை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். ஒரு சில A-4 தாள்கள் மற்றும் 33 பழைய செய்தித் தாள்களைக் கொண்டு, மூன்றே நாட்களில் இந்த நீராவி ரயில் வண்டி மாதிரியை தயாரித்துள்ளார்.
அத்வைத் கிருஷ்ணாவின் இந்த முயற்சிக்கு ரயில்வே அமைச்சகம் பாராட்டு தெரிவித்துள்ளதோடு, தனது இணையதளத்தில் அச்சிறுவன் தயாரித்த செய்தித்தாள் ரயில் வண்டி மாதிரி வீடியோவையும் வெளியிட்டு உள்ளது.

கிருஷ்ணாவின் இந்த பேப்பர் ரயில் வண்டி தயாரிப்புக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். சிறுவனின் இந்த வடிவமைப்பை ரயிலை அருங்காட்சியத்தில் வைக்க வேண்டும் எனவும  மத்திய அரசுக்கு கோரிக்கை பலதரப்பில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

பிற செய்திகள்

கர்நாடகாவில் 2 மாவட்டங்களில் திருமண நிகழ்ச்சிகளுக்கு தடை - மாவட்ட நிர்வாகம் உத்தரவு

இந்தியாவில் கொரோனாவுக்கு முதல் இறப்பு பதிவான கர்நாடகாவின், கலபுரகி மாவட்டம் மற்றும் அதற்கு அடுத்து உள்ள பாகல்கோட்டை ஆகிய 2 மாவட்டங்களிலும் திருமண நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

8 views

அரசு பங்களாவை காலி செய்யும் பிரியங்கா காந்தி - பாஜக எம்.பி.அனில் பலூனிக்கு அரசு பங்களா

டெல்லியில் பிரியங்கா காந்தி தங்கியிருந்த அரசுப்பங்களா தற்போது பாஜக எம்.பியும், பாஜக ஊடக ஊடக செய்தி தொடர்பாளருமான அனில் பலூனிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

49 views

"ஹார்வார்டு பிசினஸ் ஸ்கூல் எதிர்கால ஆய்வில் மோடியின் தோல்விகள்" - கொரோனா குறித்த வீடியோவை பகிர்ந்த ராகுல்காந்தி

'ஹார்வார்டு பிஸினஸ் ஸ்கூல்' எதிர்கால ஆய்வில் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தோல்விகள் இடம்பெறும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

67 views

பா.ஜன சங்க நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த நாள் - பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, மலர் தூவி மரியாதை

பாரதீய ஜன சங்க நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளை ஒட்டி டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

19 views

எல்லையில் அமைதியை நிலைநாட்ட உடன்பாடு - இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள முடிவு

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்கள் மோதல் சம்பவம் எதிரொலியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி Wang YI உடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

1025 views

"கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவக்கூடியது" - பல்வேறு நாடுகளை சார்ந்த விஞ்ஞானிகள் தகவல்

கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவக்கூடியது என்றும் விதிமுறைகளை மாற்ற கோரி, உலக சுகாதார மையத்திற்கு விஞ்ஞானிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

956 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.