சாத்தான்குளம் வணிகர்கள் உயிரிழந்த விவகாரம் - தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் கனிமொழி புகார்
பதிவு : ஜூன் 26, 2020, 04:25 PM
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு இ மெயிலில், தி.மு.க. எம்.பி. கனிமொழி புகார் அளித்துள்ளார்.
* சாத்தான்குளம் சம்பவத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக, தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் தி.மு.க. எம்.பி. கனிமொழி இ மெயில் மூலம் புகார் அளித்துள்ளார்.

* தமது தொகுதிக்கு உட்பட்ட சாத்தான் குளத்தை சேர்ந்த தந்தை, மகன் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிரிழந்துள்ளதாகவும் 

* 58 வயதான ஜெயரா​ஜ் மற்றும் 31 வயதான பென்னிக்ஸ்  இருவரும் அங்கு 10 ஆண்டுகளாக தொழில் செய்து வருவதோடு, சமூகத்திலும் மரியாதை உடன் இருந்து வந்ததாகவும் கனிமொழி சுட்டிக்காட்டி உள்ளார்.

* ஊரடங்கு உத்தர​வை மீறியதாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரை பார்க்கச் சென்ற அவரது மகன் பென்னிக்ஸ் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்த சாத்தான் குளம் போலீசார் இருவரையும் சிறைப் பிடித்ததாகவும்
 
* இரவில் நடத்திய விசாரணையின்போது, பென்னிக்ஸின் ஆசனவாயிலில் லத்தியை நுழைத்து கடுமையாக தாக்கியதில் ரத்தம் பீறிட்டுள்ளது என்றும்,

* இதேபோல, ஜெயராஜின் மார்பில் பூட்ஸ் காலால் மாறி மாறி  மிதித்ததில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழ​ந்து உள்ளதாகவும் கனிமொழி அதில் கூறியுள்ளார். 

* மேலும், அரசு மருத்துவரை மிரட்டி இருவர் உடல் நிலையும்ம நன்றாக உள்ளதாக சான்றிதழ் வாங்கிய சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர்.  நீதிபதி முன்பு 50 மீட்டர் இடைவெளியில் இருவரையும் நிறுத்தி ரிமாண்ட் உத்தரவு பெற்றதாகவும் கனிமொழி தெரிவித்துள்ளார்.

* இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து அரசு அதிகாரிகள் மீது குற்ற வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

* தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 15 லாக் அப் சாவுகள் நடைபெற்ற நிலையில், இந்த சம்பவத்திலாவது விரைந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் செயல்பட வேண்டும் என கனிமொ​ழி வலியுறுத்தி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2038 views

ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணையம் வாயிலாக உரையாட உள்ள நடிகர் கமல்ஹாசன்

வரும் ஜூன் 11 ஆம் தேதி இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணையம் வாயிலாக உரையாட உள்ளனர்.

537 views

டிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்

இந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

196 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

50 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

18 views

பிற செய்திகள்

"சாத்தான்குளம் சம்பவம்-குற்றவாளிகளுக்கு மரண தண்டனை" - பொன்.ராதாகிருஷ்ணன்

சாத்தான்குளம் சம்பவம் மற்றும் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

709 views

சென்னையில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை நெருங்குகிறது

சென்னையில் தொடர்ந்து 5வது நாளாக கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது .

22 views

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது

தமிழகத்தில் 2வது நாளாக கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது. இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 329 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

17 views

என்எல்சி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

கடலூர் மாவட்டம் என்எல்சி நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

20 views

போர்வீரர்கள் மத்தியில் திருக்குறள் விளக்கம் - பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து நன்றி

இந்திய- சீன எல்லையில், லடாக்கில் ராணுவ வீரர்களிடம் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியதற்கு பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார்.

846 views

"காவல்துறையையும், தமிழக அரசையும் திமுக தலைவர் ஸ்டாலின் தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சாத்தான்குளம் விவகாரத்தில் அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் தரம் தாழ்ந்து விமர்சிப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

264 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.